தேசிய செய்திகள்

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது + "||" + Man jumps in front of Defence minister Rajnath Singh’s convoy, says wanted to get name changed on Aadhaar

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காரை மறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,

டெல்லியில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கான்வாய் முன்பு பாய்ந்த இளைஞரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில், ராஜ்நாத் சிங்கின் கார் வந்து கொண்டிருந்தது. ராஜ்நாத்சிங்கின் காருக்கு முன்னும் பின்னும்  பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுத்துச் சென்றன. அப்போது திடீரென வாகன அணிவகுப்பு முன் குறுக்கே வந்த நபர் ஒருவர், ராஜ்நாத் சிங் பயணித்த காரை நெருங்கினார். அந்த நபரை மடக்கி பிடித்த பாதுகாப்பு படையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தி உள்ளூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரனையில், உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரைச்சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. தனது ஆதார் கார்டில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்பதால், ராஜ்நாத் சிங்கை வழிமறித்ததாக கூறினார். மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல தெரிவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. எனினும், அந்த நபரிடம் உளவுத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு
எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆய்வு மேற்கொண்டார்.
2. வரும் 17-ஆம் தேதி லடாக் செல்கிறார் ராஜ்நாத்சிங்
வரும் 17-ஆம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் லடாக் பயணம் மேற்கொள்கிறார்.
3. நாளை முதல் 3 நாட்கள் ராஜ்நாத் சிங் ரஷியாவில் சுற்றுப்பயணம்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ரஷ்யா செல்கிறார்.
4. ராஜ்நாத்சிங்குடன் ஜோதிர் ஆதித்ய சிந்தியா சந்திப்பு
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நேற்று பாரதீய ஜனதாவில் முறைப்படி இணைந்தார்.