தேசிய செய்திகள்

வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு + "||" + Ayodhya for vote politics: Modi

வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு

வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜாம்ஷெட்பூர், 

பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் ஜார்கண்ட் மாநில சட்டசபைக்கு 5 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட தேர்தல் கடந்த 30–ந் தேதி 13  தொகுதிகளில் நடந்தது. 2–வது கட்ட தேர்தல் 20 தொகுதிகளில் வரும் 7–ந் தேதி நடக்கிறது.

2–ம் கட்ட தேர்தலை சந்திக்கும் ஜாம்ஷெட்பூரிலும், குந்தி என்ற இடத்திலும் பாரதீய ஜனதா தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் இன்று நடந்தது. அவற்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசன பிரிவு 370 பற்றி நாடு விடுதலை அடைந்த நாள் முதல் பேசப்படுகிறது. இந்த சட்டப்பிரிவு தற்காலிகமானது என்று அரசியல் சாசனம் கூறியது. இப்போது அந்த சட்டப்பிரிவு நீக்கப்பட்டு விட்டது. 

ஒட்டு மொத்த நாட்டு மக்களின் ஆதரவும் எங்களுக்கு இந்த விவகாரத்தில் கிடைத்தது. நல்ல நோக்கத்துடன் எடுக்கப்படுகிற நடவடிக்கையில் நாட்டு மக்களின் ஆசி கிடைக்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக அயோத்தி பிரச்சினையில் முடிவு ஏற்படுவதை காங்கிரஸ் தடுத்தது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில், பொருளாதார மீட்சியில் பச்சை தளிர்களை நாம் காண்கிறோம் - பிரதமர் மோடி
இந்தியாவில், பொருளாதார மீட்சியில் பச்சை தளிர்களை நாம் காண்கிறோம் என்பதில் ஆச்சரியமில்லை என பிரதமர் மோடி கூறினார்.
2. ஓபிசி இட ஒதுக்கீடு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
ஓபிசி பிரிவினருக்கு தமிழக அரசின் இடஒதுக்கீடு முறையை, மத்திய அரசு பணியிலும் பின்பற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
3. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
4. இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது: புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரை
இன்று உலகம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு புத்தரின் கொள்கைகளில் உள்ளது என புத்த பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
5. எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை
எதிரிகள் உங்கள் ஆற்றலையும் ,கோபத்தையும் கண்டிருக்கிறார்கள்- லடாக்கில் ராணுவ வீரர்களிடையே பிரதமர் மோடி பேசும் போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.