தேசிய செய்திகள்

2 மாதங்களில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி கடன் வழங்கி சாதனை + "||" + Bank's Rs 5 lakh crore credit record in 2 months

2 மாதங்களில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி கடன் வழங்கி சாதனை

2 மாதங்களில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி கடன் வழங்கி சாதனை
2 மாதங்களில் வங்கிகள் ரூ.5 லட்சம் கோடி கடன் வழங்கி சாதனை படைத்துள்ளது.
புதுடெல்லி,

நாட்டு மக்களிடையே பண புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் பொதுத்துறை வங்கிகள் கூடுதலாக கடன் களை வழங்கும்படி வங்கிகளுக்கு மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி பண்டிகை காலமான அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பொதுமக்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்கள், விவசாயிகள் என பல தரப்பினருக்கும் பொதுத்துறை வங்கிகள் ரூ.4 லட்சத்து 91 ஆயிரம் கோடி கடன்களை வழங்கி உள்ளன. இது சாதனை அளவாகும்.

அக்டோபர் மாதத்தில் ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடியும், நவம்பர் மாதத்தில் ரூ.2 லட்சத்து 39 ஆயிரம் கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 374 மாவட்டங்களில் கடன் மேளாக்கள் நடத்தி இந்த கடன் வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. 2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கம்
2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கப்படுள்ளது.