தேசிய செய்திகள்

3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை; லாவகமாக பிடித்த பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ + "||" + Locals save 2-year-old who fell off 3rd floor - Viral Video

3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை; லாவகமாக பிடித்த பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ

3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை; லாவகமாக பிடித்த பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ
3-வது மாடியில் இருந்து விழுந்த குழந்தையை லாவகமாக அங்கிருந்த பொதுமக்கள் பிடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டாமன்,

குஜராத் அருகில் உள்ள டாமன் யூனியன் பிரதேசம் காரிவாட் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 2½ வயது குழந்தை ஜமால் 3-வது மாடியில் இருந்த வீட்டில் இருந்து கீழே தவறி விழுந்தது. ஆனால் 2-வது மாடியில் உள்ள வீட்டின் ஜன்னலில் அந்த குழந்தை சிக்கிக்கொண்டு சிறிது நேரம் தொங்கிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்து சிலர் அலறியதும் அந்த குடியிருப்பின் கீழே இருந்தவர்கள் சுதாரித்துக்கொண்டனர்.


பலர் அங்கு திரண்டு அந்த குழந்தை கீழே விழும் வரை காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்த குழந்தை நழுவி கீழே விழுந்ததும் லாவகமாக அவர்கள் பிடித்துக்கொண்டனர். இதனால் அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தது. இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த காட்சிகள் அங்குள்ள ஒரு கண்காணிப்பு கேமராவில் பதிவானது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர்புடைய செய்திகள்

1. தீவிர முழு ஊரடங்கு இன்று அமல்;பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்-போலீஸ் கமிஷனர் வேண்டுகோள்
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. பெரம்பலூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? போலீசார் விசாரணை
பெரம்பலூர் அருகே பிறந்து ஓரிரு நாட்களே ஆன பெண் குழந்தையை சாலையோரம் வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
3. புதுவை மாநில எல்லையில் கட்டுப்பாடு எதுவும் இல்லாத சேதராப்பட்டு- மயிலம் சாலை தாராளமாக நடமாடும் பொதுமக்கள்
புதுவை மாநில எல்லையான சேதராப்பட்டு-மயிலம் சாலையில் இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் தாராளமாக சென்று வருகின்றனர்.
4. பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
பிரேசிலில் கொரோனா வைரஸ் தாக்கி கோமாவில் இருந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
5. சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பொதுமக்கள், போலீசார் மீது கல்வீச்சு
சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி பொதுமக்கள், போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.