மாநில செய்திகள்

சென்னையில் காலையில் சில இடங்களில் லேசான மழை + "||" + Light showers in Chennai early morning

சென்னையில் காலையில் சில இடங்களில் லேசான மழை

சென்னையில் காலையில் சில இடங்களில் லேசான மழை
சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்துள்ளது.
சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த 28ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கியது.  வங்க கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி, தொடர் மழைக்கு வழிவகுத்தது.  கடலூர், ராமநாதபுரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

கனமழையால் ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி மற்றும் திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

தொடர் மழையால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  இதனால் ஒருபுறம் மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும், கனமழையால் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்துள்ளது.  இதனால் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

சென்னையில் நேற்று முன்தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழையால் விடுமுறை விடப்பட்டது.  இதன்பின்பு நேற்று மழைப்பொழிவு தீவிரம் குறைந்தது.  இந்நிலையில், சென்னையில் இன்று காலை சில இடங்களில் லேசான அளவில் மழை பெய்துள்ளது.  சென்னையில் வேப்பேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ஆதம்பாக்கம், பொன்னேரி, எழும்பூர் மற்றும் புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.

தொடர்புடைய செய்திகள்

1. தானே, பால்கர் மாவட்டங்கள் கடும் பாதிப்பு மும்பையில் எங்கும் மழை வெள்ளம் சூறைக்காற்றால் போர்க்களமான சாலைகள்
மும்பை, தானே, பால்கரில் 3-வது நாளாக கொட்டி தீர்த்த மழையால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. சூறைக்காற்றால் பல சாலைகள் போர்க்களமாக காட்சி அளித்தன.
2. திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக பருவமழை சரியாக பெய்யவில்லை. கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது.
3. நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு ; ஆராய்ச்சி நிலையம் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
4. நாமக்கல் மாவட்டத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
5. விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை: மரம், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன
விருத்தாசலம் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் மரம், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.