மாநில செய்திகள்

வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை + "||" + A fast-filling Vaigai Dam;Flood warning for coastal residents

வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணை வேகமாக நிரம்புவதால், மதுரை வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
சென்னை

கேரளா மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதி, மூல வைகை, சுருளியாறு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,243 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும்.

வைகை அணையின் நீர்மட்டம், 67 அடியை கடந்துள்ளதை அடுத்து, வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 68 அடியை எட்டும்போது, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும்போது, இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரி நீர் திறந்துவிடப்படும்.

வைகை அணை நிரம்புவதால், ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிக்குச் செல்லுமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும், வைகை ஆற்றில் குளிப்பது, மீன்பிடிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, வாகனங்களை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்கள், செல்பி எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக, வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
உசிலம்பட்டி பகுதி பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாயில் வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது.
2. நெல்லை-தென்காசியில் பரவலாக மழை: பாபநாசம் அணையில் இருந்து 7 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு
நெல்லை-தென்காசி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. எனவே, தாமிரபரணி கரையோர மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
3. வீடூர் அணை நிரம்புகிறது, சங்கராபரணி ஆற்றில் வெள்ள அபாயம் - குடியிருப்புகளில் தண்ணீர் தேங்கியது
வீடூர் அணை நிரம்பி வருவதால் சங்கரா பரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது. குடியிருப்பு களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
4. வைகை தண்ணீர் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
வைகை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் பெற அரசாணை பிறபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. தண்ணீர் திறப்பு எதிரொலி: குறைந்து வரும் வைகை அணையின் நீர்மட்டம்
வைகை அணையில் இருந்து 4 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.