உலக செய்திகள்

சூடானில் தொழிற்சாலையில் தீ விபத்து; இந்தியர்கள் உள்பட 23 பேர் பலி + "||" + Indians among 23 killed in factory fire in Sudan

சூடானில் தொழிற்சாலையில் தீ விபத்து; இந்தியர்கள் உள்பட 23 பேர் பலி

சூடானில் தொழிற்சாலையில் தீ விபத்து; இந்தியர்கள் உள்பட 23 பேர் பலி
சூடான் நாட்டில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இந்தியர்கள் உள்பட 23 பேர் பலியாகினர்.
கார்டம்,

சூடான் நாட்டின் கார்டம் நகரில் மட்பாண்டம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.  இங்கு 50க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணிபுரிந்து வந்துள்ளனர்.  இந்நிலையில் எரிவாயு நிரம்பிய லாரி ஒன்று ஆலையில் திடீரென வெடித்து சிதறியது.

இதில் சிக்கி 23க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.  அவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.  130க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இதுபற்றி அந்நாட்டில் அமைந்துள்ள இந்திய தூதரகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தொழிலாளர்கள் உள்பட பலர் பலியாகியும், காயமடைந்தும் உள்ளனர் என தகவல்கள் கிடைத்து உள்ளன என தெரிவித்துள்ளது.

இந்த ஆலையில் தேவையான பாதுகாப்பு சாதனங்கள் இல்லை.  வெடிக்க கூடிய பொருட்கள் முறையற்ற வகையில் வைக்கப்பட்டு உள்ளன.  இதனால் தீ பரவி உள்ளது என சூடான் அரசு தெரிவித்து உள்ளது.  இதுபற்றிய விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை
மலாடில் மும்பை கிரிக்கெட் பயிற்சி வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. குட்டையில் பிணமாக மிதந்த 2 கல்லூரி மாணவர்கள் கொலையா? போலீசார் விசாரணை
அரக்கோணம் அருகே கல்லூரி மாணவர்கள் 2 பேர் குட்டையில் பிணமாக மிதந்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3. கொரோனா சிகிச்சை மைய தீ விபத்து: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு; ரூ.50 லட்சம் இழப்பீடு அறிவிப்பு
ஆந்திர பிரதேசத்தில் கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது.
4. நடிகர் சுஷாந்த் சிங் எழுதிய நன்றிகடன் பட்டவர்கள் பட்டியல் சமூகவலைதளத்தில் வெளியிட்ட நடிகை ரியா
நடிகர் சுஷாந்த் சிங் எழுதியதாக கூறப்படும் நன்றிகடன் பட்டவர்கள் பட்டியலை நடிகை ரியா சக்கரபோர்த்தி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
5. வேலூரில் பெண் டாக்டர் மர்மச்சாவு போலீசார் விசாரணை
வேலூரில் பெண் டாக்டர் மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...