மாநில செய்திகள்

கோவை: கனரா வங்கியில் கடன் தராததால் வாடிக்கையாளர் ஆத்திரம்; ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் + "||" + Customer resentment for not giving credit

கோவை: கனரா வங்கியில் கடன் தராததால் வாடிக்கையாளர் ஆத்திரம்; ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்

கோவை: கனரா வங்கியில் கடன் தராததால் வாடிக்கையாளர் ஆத்திரம்; ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல்
கோவையில் கனரா வங்கியில் கடன் தராததால் வாடிக்கையாளர் ஒருவர் ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை,

கோவையில் கனர வங்கியில் துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து வாடிக்கையாளர் ஒருவர் ஊழியர்களை மிரட்டினார். மேலும் வங்கியின் மேலாளருக்கு மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன் ஊழியர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தினார்.  இந்த சம்பவம் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவானது.

வங்கியில் கடன் பெற்று தருவதாக இடைத்தரகர் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த வாடிக்கையாளர் வெற்றிவேலன், கத்தி, துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்து, இடைத்தரகரை தாக்கியுள்ளார். காப்பாற்ற முயன்ற வங்கி முதன்மை மேலாளர் சந்திரசேகரையும் தாக்கிவிட்டு தப்பி சென்றார். 

இது குறித்து வங்கி ஊழியர்கள் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்த ரேஸ்கோர்ஸ் போலீசார்  கனரா வங்கியில்  துப்பாக்கி, கத்தியுடன் நுழைந்து தாக்குதல் நடத்திய வெற்றிவேலனை கைது செய்தனர். கடன் தர மறுத்ததால் வங்கிக்குள் நுழைந்து மேளாளர், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.