தேசிய செய்திகள்

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு + "||" + Four soldiers trapped in avalanches in Kashmir

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 4 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
வடகாஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 4 ராணுவ வீரர்களும் உயிரிழந்து விட்டனர்.
ஸ்ரீநகர்,

காஷ்மீரின் வடக்கே குப்வாரா மாவட்டத்தில் தங்தார் பகுதியில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே ராணுவ முகாம் அமைக்கப்பட்டு அதில் வீரர்கள் தங்கி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்த பகுதியில் திடீரென நேற்று மதியம் பனிச்சரிவு ஏற்பட்டது.  இதில் 2 ராணுவ வீரர்கள் சிக்கி கொண்டனர்.  இதேபோன்று காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் குரேஜ் பிரிவில் தவார் பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.  அவர்களில் 2 ராணுவ வீரர்கள் அந்த பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கினர்.

அவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணி தீவிரமுடன் நடந்தது.  நேற்று மாலை பருவநிலை மாற்றத்தினால் இடையூறு ஏற்பட்டு மீட்பு பணி ஒத்தி வைக்கப்பட்டது.  அவர்கள் 4 பேரையும் மீட்கும் பணிகள் மீண்டும் இன்று காலை தொடங்கி நடந்தன.  இதில் 4 வீரர்களும் உயிரிழந்து விட்டனர் என கண்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு உரையாற்றிய மோடி
லடாக்கில் ராணுவ வீரர்கள் மத்தியில் திருக்குறளை குறிப்பிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
2. ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள், தலிபான் பயங்கரவாதிகள் மோதல் - 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள், தலிபான் பயங்கரவாதிகள் மோதலில் 6 பேர் பலியாகினர்.