மாநில செய்திகள்

ரஜினிகாந்த் அடுத்தாண்டு கட்சி தொடங்குவது உறுதி - தமிழருவி மணியன் பேட்டி + "||" + Rajinikanth is sure to start next year

ரஜினிகாந்த் அடுத்தாண்டு கட்சி தொடங்குவது உறுதி - தமிழருவி மணியன் பேட்டி

ரஜினிகாந்த் அடுத்தாண்டு கட்சி தொடங்குவது உறுதி - தமிழருவி மணியன் பேட்டி
ரஜினிகாந்த் அடுத்தாண்டு கட்சி தொடங்குவது உறுதி என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.
சென்னை,

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். 

ரஜினிகாந்தை சந்தித்த பிறகு தமிழருவி மணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ரஜினிகாந்தை சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தேன். எனது கருத்துகளுக்கும், அவருக்கும் தொடர்பில்லை. 

ரஜினிகாந்தின் பிறந்தநாளில் கட்சி குறித்த அறிவிப்பு வர வாய்ப்பில்லை.

அடுத்தாண்டு கட்சி தொடங்குவது உறுதி. கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் தான் கூற முடியும். அவர் ஆழமாக சிந்திப்பவர். எந்த விஷயத்திலும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்பவர். இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...