தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு + "||" + DMK MPs meet with PM Modi

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு
தமிழக பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடியை திமுக எம்.பி.க்கள் சந்தித்தனர்.
புதுடெல்லி,

திமுக எம்.பி.க்கள்  கனிமொழி, டி.ஆர். பாலு தலைமையில் இன்று பிரதமர் மோடியை  திடீர் என சந்தித்தனர். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமர் மோடியிடம் அவர்கள் அளித்தனர். அந்த மனுவில், 

* நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு வேண்டும்

* மாநில உரிமையை நிலைநாட்டும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் வேண்டும்.

* முல்லைப்பெரியாறு, மேகதாது, தென்பெண்ணை போன்ற நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்.

* சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும்.

* எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

* தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

* தமிழகத்தில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்பது உள்பட 16 கோரிக்கைகள் அதில் இடம் பெற்று உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: கு.க செல்வம்
திமுகவில் இருந்து என்னை நீக்கியது ஜனநாயக படுகொலை: என்று ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் தெரிவித்துள்ளார்.
2. திமுகவில் இருந்து ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ கு.க செல்வம் நீக்கம்
திமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ, கு.க செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.
3. சுதந்திர தின விழா: 45 முதல் 90 நிமிடங்கள் வரை பிரதமர் மோடி உரையாற்றுவார் எனத்தகவல்
சுதந்திர தின விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
4. கொரோனா தடுப்பு பணி மோடி அரசின் நடவடிக்கைக்கு 74 சதவீதம் பேர் ஆதரவு-ஆய்வில் தகவல்
நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக 74 சதவீதம் பேர் தெரிவித்து இருப்பது ஆய்வில் தெரியவந்து உள்ளது.
5. என்னை குறித்த தில்லு முல்லு பிரசாரம் எடுபடாது - திமுக பொருளாளர் துரைமுருகன்
என்னை குறித்து பரப்பப்படும் தில்லு முல்லு பிரசாரம் எடுபடாது என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.