கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார் + "||" + ICC Test Match Player Rankings International Cricket Council

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்

டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்
டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார்.


பாகிஸ்தானுக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகல்-இரவு டெஸ்டில் சுமித் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. 36 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் 8 தரவரிசைபுள்ளிகளை இழந்த சுமித் தற்போது மொத்தம் 923 புள்ளிகள் பெற்று இருக்கிறார். சுமித்துக்கு ஏற்பட்ட சறுக்கல் காரணமாக 2-வது இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி (928 புள்ளி) தானாகவே முதலிட அரியணையில் மீண்டும் ஏறியுள்ளார். கோலி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்டு டெஸ்டில் 335 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்திய ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கிடுகிடுவென 12 இடங்கள் எகிறி 5-வது இடத்துக்கு (764 புள்ளி) வந்துள்ளார். இதே டெஸ்டில் 162 ரன்கள் விளாசிய மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஸ்சேன் 6 இடங்கள் ஏற்றம் கண்டு முதல்முறையாக டாப்-10 இடத்திற்குள் அடியெடுத்து வைத்து, 731 புள்ளிகளுடன் 8-வது இடம் வகிக்கிறார். ஆண்டின் தொடக்கத்தில் 110-வது இடத்தில் இருந்த லபுஸ்சேன் வியப்பூட்டும் வகையில் முன்னேற்றம் கண்டிருக்கிறார்.

கடந்த வாரம் பின்னடைவுக்குள்ளான இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மறுபடியும் டாப்-10 இடத்திற்குள் நுழைந்து விட்டார். நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இரட்டை செஞ்சுரி போட்ட ஜோ ரூட் (752 புள்ளி) 11-ல் இருந்து 7-வது இடத்திற்கு வந்துள்ளார். நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் (877 புள்ளி), இந்தியாவின் புஜாராவின் (791 புள்ளி) மாற்றமின்றி 3, 4-வது இடத்தில் தொடருகிறார்கள்.

இந்திய வீரர்களில் அஜிங்யா ரஹானே 6-வது இடத்திலும் (ஒரு இடம் சரிவு), மயங்க் அகர்வால் 12-வது இடத்திலும் (2 இடம் தளர்வு) ரோகித் சர்மா 16-வது இடத்திலும் (3 இடம் குறைவு) உள்ளனர்.

டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் (900 புள்ளி), தென்ஆப்பிரிக்காவின் காஜிசோ ரபடா (839 புள்ளி), வெஸ்ட் இண்டீசின் ஜாசன் ஹோல்டர் (830 புள்ளி), நியூசிலாந்தின் நீல் வாக்னெர் (814 புள்ளி), இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா (794 புள்ளி) ஆகியோர் உள்ளனர்.

இந்திய தரப்பில் அஸ்வின் 9-வது இடத்திலும், முகமது ஷமி 10-வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 16-வது இடத்திலும், இஷாந்த் ஷர்மா 17-வது இடத்திலும், உமேஷ் யாதவ் 20-வது இடத்திலும் இருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் 10 விக்கெட்டுகளை அள்ளிய வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் ரகீம் கார்ன்வால் ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளார். 63 இடங்கள் அதிகரித்து 47-வது இடத்தை பிடித்துள்ளார். இதே போல் பாகிஸ்தானுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் 7 விக்கெட்டுகளை அறுவடை செய்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 4 இடங்கள் ஏற்றத்துடன் 14-வது இடத்தை கைப்பற்றியுள்ளார்.

டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் இந்தியா 120 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது.

நியூசிலாந்து 2-வது இடத்திலும் (109 புள்ளி), இங்கிலாந்து 3-வது இடத்திலும் (104 புள்ளி), தென்ஆப்பிரிக்கா 4-வது இடத்திலும் (102 புள்ளி), ஆஸ்திரேலியா 5-வது இடத்திலும் (102 புள்ளி) உள்ளது.


வீரர்கள் தரவரிசை வருமாறு:-

1) வீராட் கோலி (இந்தியா) - 928
2) ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) - 923
3) வில்லியம்சன் (நியூசிலாந்து) - 877
4) புஜாரா (இந்தியா)- 791
5) வார்னர் (ஆஸ்திரேலியா)-764
6) ரஹானே( இந்தியா) - 759
7)ஜோய்  ரூட்( இங்கிலாந்து) - 752
8) லபுஸ்சக்னே( ஆஸ்திரேலியா)  - 731
9) நிக்கோல்ஸ் ( நியூசிலாந்து) - 726
10) கருணரத்னே ( இலங்கை)- 723

டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் (பந்துவீச்சு)

1) கம்மின்ஸ் ( ஆஸ்திரேலியா)- 900 புள்ளிகள்
2) ரபடா (தென்னாப்பிரிக்கா) - 839
3) ஹோல்டர்(வெஸ்ட் இண்டீஸ்)- 830
4) வாக்னர் ( நியூசிலாந்து) - 814
5) பும்ரா( இந்தியா)- 794
6) பிலாந்தர்(தென்னாப்பிரிக்கா)  - 783
7) ஆண்டர்சன் ( இங்கிலாந்து)- 782
8) ஹஸ்ல்வுட்( ஆஸ்திரேலியா) - 776
9) அஷ்வின்( இந்தியா) - 772
10) முகமது ஷமி( இந்தியா) - 771

தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்: பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமுக்கு பாராட்டு
இங்கிலாந்துடனான முதல் டெஸ்ட்டில் சிறப்பாக விளையாடிய வீரர் பாகிஸ்தான் வபாபர் அசாமுக்கு பாராட்டு கிடைத்துள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது.
3. அக்தர் பந்தை எதிர்கொள்ள தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் - அப்ரிடி
சோயிப் அக்தர் பந்தை எதிர்கொள்ள சச்சின் தெண்டுல்கர் பயப்படுவார், ஆனால் அவர் அதை ஏற்க மாட்டார் என்று ஷாகித் அப்ரிடி கூறி உள்ளார்.
4. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் என் கழுத்தில் கத்தியை வைத்தார் முன்னாள் பயிற்சியாளர் அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார் என பாகிஸ்தானின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்து உள்ளார்.
5. தோனி இல்லை என்றால் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை அன்றே முடிந்திருக்கும்- கவுதம் காம்பீர் பரபரப்பு தகவல்
தோனி மட்டும் அன்று கோலியை பாதுகாக்காமல் இருந்திருந்தால், கோலியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்திருக்கும் என கவுதம் காம்பீர் தெரிவித்து உள்ளார்.