தேசிய செய்திகள்

என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் : நிதின் கட்காரி + "||" + chidambaram filed false cases against me pm modi shah when he was fm says nitin gadkari

என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் : நிதின் கட்காரி

என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் : நிதின் கட்காரி
என் மீதும், பிரதமர் மோடி மீதும் சிதம்பரம் பொய் வழக்குகளை தொடுத்தார் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
ராஞ்சி ( ஜார்கண்ட்),

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரத்திற்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சிதம்பரம், இன்று விடுதலையாகிறார். 

இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த  மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி கூறியதாவது:  “ப.சிதம்பரத்திற்கு எதிரான வழக்குகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே, விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது, வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் நீதிமன்றம் உரிய முடிவை எடுக்கும்.

நாங்கள் ஒருபோதும் பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டதில்லை. ஆனால், காங்கிரஸ் ஆட்சி காலத்தில்  சிதம்பரம் நிதி அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் மீதும் என் மீதும் பொய் வழக்குகளை தொடுத்தார். இந்த வழக்குகளில் நாங்கள் நிரபராதி என்பதை பின்பு நிரூபித்தோம்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை - ப.சிதம்பரம்
2019-2020-ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%-க்கும் கீழ் குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
2. பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? மாணவர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி
பொதுத்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது எப்படி? என்ற நிகழ்ச்சியில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
3. மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்: டெல்லியில் நடக்கிறது
டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாட உள்ளார்.
4. 72-வது இந்திய ராணுவ தினம்: ஜனாதிபதி- பிரதமர் மத்திய அமைச்சர்கள் வாழ்த்து
இந்திய ராணுவம், நாட்டு மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தன்னை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்கும் திறன் படைத்தது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
5. அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து
அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும் என பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.