தேசிய செய்திகள்

2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம் + "||" + India 5th most vulnerable to climate change: Global Climate Risk Index 2020

2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்

2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 5-வது இடம்
உலகளாவிய காலநிலை இடர்பாடுகளால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது என சுற்றுச்சூழல் சிந்தனை அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,

ஜெர்மனியின் பான் நகரை தளமாகக் கொண்ட ஒரு இலாப நோக்கற்ற, அரசு சாரா அமைப்பு ஜெர்மன் வாட்ச் சுற்றுச்சூழல் சிந்தனைக் அமைப்பாகும் . காலநிலை மாற்ற செயல்திறன் குறியீடு (சி.சி.பி.ஐ) என்பது ஜெர்மன் வாட்ச், நியூகிளைமேட் நிறுவனம் மற்றும் காலநிலை நடவடிக்கை நெட்வொர்க் இன்டர்நேஷனல் ஆகியவற்றின் வருடாந்திர பட்டியலாகும்.

181 நாடுகளை மதிப்பிட்ட சுற்றுச்சூழல் சிந்தனைக் குழுவான ஜெர்மன்வாட்ச் வெளியிட்டுள்ள குளோபல் க்ளைமேட் ரிஸ்க் இன்டெக்ஸ் 2020, பொருளாதார இழப்புகள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும்  இறப்புகள் ஆகியவற்றின் மூலம் காலநிலை மாற்றத்தினால் அளவிடப்பட்ட தாக்கங்களை மதிப்பிடுகிறது.

தீவிர வானிலை நிகழ்வுகளிலிருந்து யார் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்? 1999 முதல் 2018 வரையிலான வானிலை தொடர்பான இழப்பு  விவரங்கள் அதில் பட்டியலிடபட்டு உள்ளன.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை 2018 ஆம் ஆண்டில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளாக இருந்தன, அதனைத் தொடர்ந்து மடகாஸ்கர், இந்தியா மற்றும் இலங்கை ஆகியவை உள்ளன.இந்தியா காலநிலை மாற்றம் காரணமாக அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளையும், 2018 ஆம் ஆண்டில் அதன் தாக்கத்திலிருந்து இரண்டாவது அதிகபட்ச பொருளாதார இழப்புகளையும் பதிவு செய்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை இந்தியாவை கடுமையாக பாதித்தது, குறிப்பாக கேரளாவில் 324 பேர் பலியார்கள். 220,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 20,000 வீடுகள் மற்றும் 80 அணைகள் அழிந்துள்ளன. சேத மதிப்பு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அக்டோபர் மற்றும் நவம்பர் 2018-ல் இந்தியாவின் கிழக்கு கடற்கரையிலும் டிட்லி மற்றும் கஜா சூறாவளிகள் தாக்கப்பட்டன. காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோமீட்டர் வரை இருந்தது. டிட்லி சூறாவளியால் 8 பேர் பலியானர்கள் என கூறப்பட்டு உள்ளது.