தேசிய செய்திகள்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர் + "||" + additional forces sent to kashmir in aug start to leave

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது; கூடுதல் பாதுகாப்பு படையினர் வெளியேறத் தொடங்கினர்
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்த மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய இரண்டும் யூனியன் பிரதேசங்களாக முறைப்படி செயல்படத் துவங்கியது. தற்போது, துணை நிலை ஆளுநர்கள் நிர்வாகத்தின் கீழ் இரண்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன. 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பு ,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  துணை ராணுவ வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். இணையதள முடக்கம் உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், அங்கு பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இந்த நிலையில்,  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு சுமார் 5 மாதங்கள்  ஆகியுள்ள நிலையில் காஷ்மீரில் வேகமாக இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இதையடுத்து, கூடுதலாக அனுப்பப்பட்ட வீரர்கள்  திரும்ப  அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது, சுமார் 4 ஆயிரம் வீரர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறி தங்கள் முகாமிற்கு திரும்பினர். வரும் நாட்களில், கூடுதலாக அனுப்பப்பட்ட வீரர்கள் முழுவதுமாக திரும்பபெறப்படுவார்கள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் கண்டெடுப்பு
காஷ்மீரின் ஷோபியானில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட இந்திய இராணுவ வீரரின் உடைகள் வெள்ளிக்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன.
2. புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை
புதிய கல்விக்கொள்கை: முதல் அமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் கேபி அன்பழகன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்
3. காஷ்மீரில் மெகபூபா முப்திக்கு மேலும் 3 மாதங்கள் வீட்டுக் காவல் நீட்டிப்பு
பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மெகபூபா முப்தியின் வீட்டுக் காவலை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
4. புதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன? உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்
புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
5. எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.