சினிமா செய்திகள்

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் -சினிமா இயக்குனரின் பதிவிற்கு கடும் கண்டனம் + "||" + 'What a bloody moron!': Twitterati slam Daniel Shravan on 'cooperate with rapists' comment

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் -சினிமா இயக்குனரின் பதிவிற்கு கடும் கண்டனம்

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் -சினிமா இயக்குனரின் பதிவிற்கு கடும் கண்டனம்
பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்ற சினிமா இயக்குனரின் பதிவிற்கு கடும் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது.
ஐதராபாத்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் கால்நடை மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை மிகக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனக்குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்து தன்னை சினிமா இயக்குநர் என்று அறிவித்துக் கொள்ளும் டேனியல் ஷர்வன் என்பவரது பேஸ்புக் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வன்முறையற்ற பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பிலான அவருடைய பதிவில், ‘பாலியல் வன்கொடுமை ஒன்றும் மோசமான ஒன்று இல்லை. ஆனால், கொலை ஏற்றுக்கொள்ளமுடியாதது. பாலியல் வன்கொடுமைக்கு கடுமையான தண்டனைகள் வழங்குவதால் தான் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்கிறார்கள்.

வன்முறையற்ற பாலியல் வன்கொடுமை என்பதன் மூலமே பாதிக்கப்படும் பெண்களை, கொடூரமாக கொல்லப்படுவதிலிருந்து பாதுகாக்க ஒரே வழி. பெண்கள் மீது நடைபெறும் வன்முறைக்கு சமூகம் மற்றும் பெண்கள் அமைப்புகள்தான் முக்கிய காரணங்கள்.

நிர்பயா சட்டம் வன்முறையான பாலியல் வன்கொடுமையைக் கட்டுப்படுத்தாது. அதனால், பெண்கள்தான் அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பெண்கள், கையோடு ஆணுறைகளை எடுத்துச் செல்லுங்கள். பாலியல் வன்கொடுமை செய்பவர்களிடம் கொடுத்து அவர்களுக்கு ஒத்துழைப்பு அளியுங்கள்.

கொலையை விட பாலியல் வன்கொடுமை என்பது மோசமான ஒன்று. கொலை என்பது பாவம். ஆண்களுக்கு பாலியல் ஆசை தன்னிறைவு அடையும்போது அவர்கள் பாதிக்கப்படும் பெண்களைக் கொலை செய்யமாட்டார்கள்.

பாலியல் வன்கொடுமைதானே என்று காவல்துறையும், பெண்கள் அமைப்பும் பாலியல் வன்கொடுமையை சாதாரணமாக எடுத்துக் கொள்ளும்போது, பாதிக்கப்படும் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் விட்டுவிடுவார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டேனியல் ஷர்வனின் ஃபேஸ்புக் பதிவிற்கு பாடகி சின்மயி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதுபோல் மேலும் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.