தேசிய செய்திகள்

106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி : ப.சிதம்பரம் + "||" + P Chidambaram, Granted Bail In INX Case, Walks Out Of Jail After 105 Days

106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி : ப.சிதம்பரம்

106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பதில் மகிழ்ச்சி :  ப.சிதம்பரம்
106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று  ஜாமீன் வழங்கியது. தனிக்கோர்ட்டு நீதிபதி முன்பு ரூ.2 லட்சம் சொந்த ஜாமீனும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனும் வழங்கி அவர் ஜாமீனில் விடுதலை ஆகலாம் என்றும் ப.சிதம்பரம் தனிக்கோர்ட்டின் அனுமதி இன்றி வெளிநாடு செல்லக்கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, ப.சிதம்பரம் 105 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்தார். திகார் சிறையில் இருந்து வெளிவந்த சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப.சிதம்பரம், “நான் நாளை பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறேன். 106 நாட்களுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. சோனியா காந்தி உடல்நிலையில் முன்னேற்றம் - டெல்லி கங்காராம் மருத்துவமனை தலைவர் தகவல்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் உடல் நலம் முன்னேற்றுத்துடன், திருப்தியளிக்கும் வகையில் உள்ளதாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
2. சோனியா காந்தி தலைமையில் 30-ம் தேதி காங்கிரஸ் மாநிலங்களவை எம்.,பிக்கள் கூட்டம்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா தலைமையில் நாளை மறுநாள் (30-ம் தேதி) மாநிலங்களவை எம்.பி-க்கள் கூட்டம் நடைபெறுகிறது.
3. கொரோனா விவகாரம்; காங்.எம்.பிக்களுடன் சோனியா காந்தி இன்று ஆலோசனை
காங்கிரஸ் மக்களவை எம்.பிக்களுடன் காணொலி காட்சி வாயிலாக சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
4. ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைப்பு
ராஜீவ் காந்தி அறக்கட்டளை உள்பட 3 அமைப்புகள் பெற்ற நன்கொடை குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
5. இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? சோனியா காந்தி கேள்வி
இந்திய நிலப்பகுதியை சீனா ஆக்கிரமிக்கவில்லை என்றால் 20 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்தது ஏன்? சோனியா காந்தி கேள்வி