தேசிய செய்திகள்

சூடான் தீவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் + "||" + Anguished by blast in Sudan's ceramic factory, tweets PM Modi; assures assistance to affected

சூடான் தீவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

சூடான் தீவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
சூடான் தீவிபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கார்த்தோம்,

சூடான் தலைநகரான கார்த்தோமில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில்  கேஸ்  நிரப்பப்பட்ட டேங்கர் லாரி ஒன்று திடீரென்று தீப்பிடித்து வெடித்துச் சிதறியது.

இந்த தீ பரவியதை அடுத்து தொழிற்சாலையும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 130 பேர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிர் இழந்தவர்களில்  18 பேர் இந்தியர் என்றும் இதில் 3 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும்  கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த தீ விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“சூடானில் ஒரு தொழிற்சாலையில் குண்டுவெடிப்பில், சில இந்திய தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர், சிலர் காயமடைந்துள்ளனர். இந்த செய்தியைக் கேட்டு நான் மிகவும் வேதனையடைந்தேன்.

தங்கள் சொந்தங்களை இழந்து துயரமடைந்துள்ள குடும்பத்தினருக்காகவும், காயமடைந்தவர்களுக்காகவும் நான் பிரார்த்தனை செய்கிறேன்.

பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் எங்கள் தூதரகம் வழங்கி வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலசக்தி புரஸ்கார் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடல்: குழந்தைகள் வாழ்வில் பின்பற்ற மோடி அறிவுறுத்திய 3 உறுதிமொழிகள்
பாலசக்தி புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் குழந்தைகள் வாழ்வில் பின்பற்றுவதற்கு மனதில் எடுத்துக்கொள்ள வேண்டிய 3 உறுதிமொழிகளை அறிவுறுத்தினார்.
2. ராமாயண கதையை சித்தரித்து மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி
இந்தியா அனுப்பி வைத்த 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் பிரேசிலுக்கு போய்ச் சேர்ந்தன. அதற்கு ராமாயண கதையை சித்தரிக்கும் படத்துடன் பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
3. நாகர்கோவிலில் சமையல் செய்யும்போது கேஸ் கசிந்து தீவிபத்து, கணவன், மனைவி 2 மகள்கள் கருகினர்
நாகர்கோவில் வடசேரியில் சமையல் செய்தபோது கேஸ் கசிந்து ஏற்பட்டு தீவிபத்தில், கணவன், மனைவி 2 மகள்கள் தீயில் கருகினர்.
4. சூடானில் கிராமத்துக்குள் புகுந்து ஆயுதமேந்திய கும்பல் கொடூர தாக்குதல்: 60 பேர் கொன்று குவிப்பு
சூடானில் கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில், 60 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.