தேசிய செய்திகள்

92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் - மத்திய அரசு தகவல் + "||" + 92 Thousand Application for BSNL Employees Optional Retirement - Central Government Information

92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் - மத்திய அரசு தகவல்

92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம் - மத்திய அரசு தகவல்
92 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க கடந்த 3-ந் தேதி கடைசி நாள் ஆகும்.


இந்நிலையில், விருப்ப ஓய்வுக்கு 92 ஆயிரம் பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஊழியர்கள் விண்ணப்பித்து இருப்பதாக மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

இரு நிறுவனங்களையும் மத்திய அரசு இணைக்கும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவை அளிக்க முடியும். இந்த நிறுவனங்களுக்கு 4ஜி சேவை அளிக்கப்படும். இரண்டையும் லாபகரமாக இயக்க உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வேலூரில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.