தேசிய செய்திகள்

நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தல் + "||" + 18 Indians on board Hong-Kong vessel kidnapped off Nigerian coast

நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தல்

நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தல்
நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற கப்பல் கடத்தப்பட்டது.
புதுடெல்லி,

ஹாங்காங் நாட்டு கப்பல் ஒன்று நேற்று முன்தினம் ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டு கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அட்லாண்டிக் கடலில் சென்று கொண்டிருந்த இந்த கப்பலை திடீரென கடற்கொள்ளையர்கள் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்கு அந்த கப்பலை கடத்தி சென்றனர். இந்த கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்தை சர்வதேச கடல் பாதுகாப்பு நிறுவனமான ஏ.ஆர்.எக்ஸ். வெளியிட்டு உள்ளது. இந்த கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 19 பேர் இருந்தனர். அவர்களது கதி என்ன என்று தெரியவில்லை. கப்பல் கடத்தப்பட்ட தகவலை அறிந்ததும், நைஜீரியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அந்த நாட்டு அரசை தொடர்பு கொண்டு கப்பலில் இருந்த இந்தியர்களின் விவரங்களை அறியவும், அவர்களை மீட்கவும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



தொடர்புடைய செய்திகள்

1. நைஜீரியாவில் பயங்கரம்: கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல்; 14 பேர் சாவு
நைஜீரியாவில் கிராமத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிக்கி 14 பேர் பலியாயினர்.
2. நைஜீரியாவில் கியாஸ் நிலையத்தில் வெடிவிபத்து; 5 பேர் பலி
நைஜீரியாவில் கியாஸ் நிலையத்தில் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்படது.
3. நைஜீரிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை
நைஜீரிய கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 18 இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
4. வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் அதிர்ச்சி தகவல்
வளைகுடா நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் 34 ஆயிரம் இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியுறவுத்துறை அதிர்ச்சி புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
5. 2014 முதல் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் 23,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள்
2014 முதல் அமெரிக்காவில் 23,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தஞ்சம் கோரி உள்ளதாக தகவல்கள் தெரிவித்து உள்ளன.