தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: 15 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு + "||" + Karnataka by-election: 15 constituencies cast today

கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: 15 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு

கர்நாடகத்தில் இடைத்தேர்தல்: 15 தொகுதிகளில் இன்று ஓட்டுப்பதிவு
கர்நாடகத்தில் 15 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று நடைபெறுகிறது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.


இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 9-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா அரசு பெரும்பான்மை பலத்தை பெற இன்னும் 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகாவில் அதிகரிக்கும் கொரோனா: இன்று மேலும் 7,908 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 7,908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. கர்நாடகாவில் இன்று மேலும் 6,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கர்நாடகாவில் இன்று மேலும் 6,706 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
கர்நாடகாவில் இன்று ஒரேநாளில் 7,034 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
4. எம்.எல்.ஏ உறவினரின் பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் வன்முறை: 2 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் எம்.எல்.ஏ உறவினர் வெளியிட்ட பேஸ்புக் பதிவால் வன்முறை வெடித்தது.
5. கர்நாடகாவில் தனியார் பேருந்து தீப்பிடித்து விபத்து: 5 பேர் பலி
கர்நாடகாவில் தனியார் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த 5 பேர் உடல் கருகி பலியாகினர்.

ஆசிரியரின் தேர்வுகள்...