தேசிய செய்திகள்

நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம் + "||" + Congress leader expresses regret over 'nirbala' remark against FM Sitharaman

நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம்

நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறிய காங்கிரஸ் தலைவர் வருத்தம்
நிர்மலா சீதாராமனை ‘நிர்பலா’ என்று கூறியதற்கு காங்கிரஸ் தலைவர் வருத்தம் தெரிவித்தார்.
புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா மீது நடந்த விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பங்கேற்று பேசினார். அப்போது, “மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பலவீனமாகி விட்டார். அவர் இனிமேல் நிர்பலா சீதாராமன்” என்று அவர் கூறினார்.


இந்நிலையில், இந்த கருத்துக்கு சவுத்ரி நேற்று மக்களவையில் வருத்தம் தெரிவித்தார். மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலளிக்க தொடங்கும்போது, சவுத்ரி குறுக்கிட்டார்.

அவர் பேசுகையில், “எனது கருத்து, நிதி மந்திரியை காயப்படுத்தி இருந்தால், வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் எனக்கு சகோதரி போன்றவர். என்னை அவருடைய சகோதரனாகவே கருதுகிறேன்” என்றார்.

அதற்கு நிர்மலா சீதாராமன் நேரடியாக பதில் அளிக்கவில்லை. தனது பதிலுரையின் இறுதியில், “நான் இன்னும் சப்லா (அதிகாரம் மிக்கவள்) தான்” என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மத்திய அரசு நாட்டு மக்களுக்கு உறுதுணையாக நிற்கிறது-நிர்மலா சீதாராமன் பேச்சு
கொரானாவினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில், நாட்டு மக்களின் பிரச்சனைகளை எதிர் கொள்ளும் விதத்தில் மத்திய அரசு உறுதுணையாக நிற்கிறது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.
2. மத்திய அரசு அறிவித்த சலுகைகளுக்கு ஏற்பவட்டி குறைக்கப்படுவதை கண்காணித்து வருகிறோம்-நிர்மலா சீதாராமன் தகவல்
மத்திய அரசு அறிவித்த சலுகைகளுக்கு ஏற்ப வட்டி குறைக்கப்படுவதை கண்காணித்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.
3. டெல்லியில் 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால் அபராதம் விதிக்கப்படாது - நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தாமதமானால், அதற்காக அபராதம் விதிக்கப்படாது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதராமன் தெரிவித்துள்ளார்.
4. புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் எதிர்கட்சியினர் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் - நிர்மலா சீதாராமன்
புலம்பெயர்ந்தோர் விவகாரத்தில் எதிர்கட்சியினர் மிகப் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
5. யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும்- நிதி அமைச்சர்
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார்.