உலக செய்திகள்

சிரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி + "||" + 10 people, including 8 children, killed in terrorist attack in Syria

சிரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

சிரியாவில் பயங்கரவாத தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி
சிரியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.
டமாஸ்கஸ்,

சிரியாவின் அலெப்போ மாகாணத்தில்  உள்ள டால் ரிபாட் நகரின் கல்ஜிப்ரின் கிராமத்தில் உள்ள ஒரு விளையாட்டு கிளப் ஒன்றில் புகுந்து, பயங்கரவாதிகள் மோர்ட்டார் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் அங்கிருந்த 8 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 7 பேர் குழந்தைகள். அவர்களில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிரியாவில் உள்ள இட்லிப் மாகாணத்தின் பாதுகாப்பு மண்டலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 40 முறை பயங்கரவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என ராணுவ ஜெனரல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வடமேற்கு சிரியாவில் வன்முறையால் 235,000க்கும் அதிகமானோர் வெளியேற்றம்
வடமேற்கு சிரியாவின் மீது ராணுவத்தின் கடும் தாக்குதலால் 2.35 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர்.
2. சிரியா அகதிகளின் அதிகமான எண்ணிக்கையை துருக்கியால் கையாள முடியாது - அதிபர் எர்டோகன்
அதிக அளவில் வரும் சிரியா நாட்டின் அகதிகளை துருக்கியால் கையாள முடியாது என்று அந்நாட்டின் அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
3. சிரியா தலைநகரில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி
சிரியாவின் தலைநகரத்தில் இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் சிக்கி ஒருவர் பலியானார்.
4. நைஜர் நாட்டில் பயங்கரவாத தாக்குதல்: 73 ராணுவ வீரர்கள் பலி
நைஜர் நாட்டில் ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 73 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
5. ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஜப்பான் மருத்துவர் உள்பட 7 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் உள்பட 7 பேர் பலியாகினர்.