தேசிய செய்திகள்

உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் ! + "||" + ‘You continue to inspire’: Indians cheer after Sundar Pichai becomes Alphabet CEO

உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் !

உலக செய்திகளில் டிரென்டிங்கில் இடம் பிடித்த 3 தமிழர்கள் !
உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிறது.

சென்னை, 

உலகம் முழுவதும் நாள்தோறும் பல்வேறு சம்பவங்களும் சாதனை நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. அவற்றில் சில செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகிறது. கடந்த ஒரு வாரத்தில் உலக செய்திகளில் மூன்று தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதில் முதல் இடத்தில் மதுரையில் பிறந்த, 47 வயதான சுந்தர்பிச்சை இடம்பெற்றுள்ளார். உலக தொழில்நுட்பத்தை தன்னுள் வைத்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியாக சில ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவரின் பொறுப்பில் கூகுள் நிறுவனம் அசாத்திய வளர்ச்சியை கண்டதால் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்திற்கும், மேலும் 8 நிறுவனங்களுக்கும் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு அடுத்தப்படியாக திருவண்ணாமலையில் பிறந்து ஆன்மிக வாழ்க்கையில் சேவை செய்வதாக கூறி வரும் பிரபல சாமியார் நித்யானந்தா, வித்தியாசமான முறையில் உலக டிரெண்டிங்கில் இடம் பெற்றார். ஆசிரம பெண்களை கொடுமைப்படுத்தியது, பாலியல் புகார், உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் பிரபலமான இவர், சில நாட்களாக கைலாசா என்ற தனி நாடு குறித்து அதிகம் பேசப்பட்டுள்ளார். 

மூன்றாவதாக, நிலவில் காணாமல் போன விக்ரம் லேண்டரை மதுரையை பூர்வீகமாக கொண்டு சென்னையில் என்ஜினீயராக உள்ள சண்முக சுப்பிரமணியன் கண்டுபிடித்ததாக நாசாவே பாராட்டியதில் ஒரே நாளில் உலகமே வியந்து பாராட்டும் அளவிற்கு பேசப்பட்டார்.


தொடர்புடைய செய்திகள்

1. 2020-ம் ஆண்டில் சுந்தர் பிச்சைக்கு ரூ.14 கோடி சம்பளம்!
2020-ம் ஆண்டில் கூகுள் அதிகாரி சுந்தர் பிச்சை ரூ.14 கோடி சம்பளம் பெற உள்ளார்.
2. சமூக வலைத்தளங்களை ஒழுங்கு படுத்த விதிகள்- உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு தகவல்
சமூக வலைத்தளங்களை ஒழுங்கு படுத்த ஜனவரி 15 ஆம் தேதிக்குள் விதிகள் ஒழுங்கு படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. மம்தா அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனம்: மேற்கு வங்காள காங். செய்தி தொடர்பாளர் கைது
மம்தா அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்த மேற்கு வங்காள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கைது செய்யப்பட்டார்.
4. ஆற்றில் மிதந்த 5 மாடி கட்டிடம்: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
5 மாடி கட்டிடம் ஒன்று ஆற்றில் மிதந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.