மாநில செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன் அறிவிப்பு + "||" + No contesting in local elections - Kamal Haasan

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன் அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;-

“தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தல் முழுமையான மக்களின் தேர்தலாக இருக்கப் போவதில்லை. இந்த தேர்தலில் மக்கள் பங்கீடு முகக் குறைவாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

இரு கட்சிகள் எழுதி இயக்கும் அரசியல் நாடகமே உள்ளாட்சித் தேர்தல். இந்த அரசியல் நாடகத்தில் எந்த பாத்திரத்தையும் ஏற்கப்போவதில்லை.

மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை. ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்ட வியாபாரப் பங்கீடு மட்டுமே அரங்கேறப்போகிறது.

இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கு பெறுவதால் கிடைக்க கூடிய முன்னேற்றம் சொற்பமானது. மாற்றத்தை லட்சியமாக கொண்டுள்ள மக்கள் நீதி மய்யம் அதை தவணை முறையில் கொஞ்சம் கொஞ்சமாக பெறுவதில் எந்த சாதனையும் இல்லை.

இனி வரும் ஐம்பது வாரங்களில் மக்கள் நலம்பேணி நற்பணிகள் செய்வோம். 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே நமது லட்சியமாக இருப்பின் வெற்றி நிச்சயம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘நேர்மையாக செயல்படாவிட்டால் கருணை காட்டமாட்டேன்’ திருச்சி கலந்துரையாடல் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை
‘நேர்மையாக செயல்படாவிட்டால் கருணை காட்டமாட்டேன்’ என்று திருச்சியில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்தார்.
2. ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது, அதிகாரத்தை கைப்பற்றாமல் அதை மாற்ற முடியாது -கமல்ஹாசன்
மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கிறது. அதிகாரத்தை கைப்பற்றாமல் ஊழல் முறையை மாற்ற முடியாது என கமல்ஹாசன் கூறி உள்ளார்.
3. கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருகை
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோயம்பேட்டில் உள்ள தேர்தல் ஆணையர் அலுவலகத்திற்கு மீண்டும் சென்றுள்ளார்.
4. உள்ளாட்சித் தேர்தல் : முன்னாள் ஊராட்சி தலைவரின் இரண்டு மனைவிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி
வந்தவாசி அருகே முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் இரண்டு மனைவிகள் ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
5. உள்ளாட்சித் தேர்தல்: 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேரம் நிறைவடைந்தது
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான 2 ஆம் கட்ட வாக்குப்பதிவு நேரம் மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

அதிகம் வாசிக்கப்பட்டவை