மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி + "||" + DMK fears local elections - Chief Minister Edappadi Palanisamy

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
கோவை,

கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

“இடஒதுக்கீடு அடிப்படையில் வார்டு மறுவரையறை செய்து தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்துள்ளது. எந்த மாவட்டத்தில் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஆட்சேபனை இருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றமே உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்றுவிட்டு தற்போது மீண்டும் நீதிமன்றத்துக்கு செல்லப்போவதாக ஸ்டாலின் கூறுகிறார்.

உள்ளாட்சித் தேர்தல் யாரால் தள்ளிபோகிறது என்பதை ஸ்டாலின் தெளிவு படுத்திவிட்டார். தேர்தலை தள்ளிப்போடுவதே ஸ்டாலினின் நோக்கம். 

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திமுக அஞ்சுகிறது. தேர்தலை எதிர்கொள்ள தெம்பு, திராணி இருக்கிறதா என நாங்கள் தற்போது திமுகவைப் பார்த்து கேட்கிறோம்.

தமிழக அரசின் கஜானா காலியாகிவிட்டதாக மூன்று ஆண்டுகளாக ஸ்டாலின் கூறிக்கொண்டு இருக்கிறார். மக்களிடம் விஷமத்தனமாக கருத்துகளை பரப்பி அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார். ஆனால் அவரது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறாது.

அதிமுக கூட்டணி உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றியை பெறும்” என்று கூறினார்.

மேலும் வெங்காய விலை உயர்வு குறித்து பேசிய அவர், வரத்து குறைவால் வெங்காய விலை பிரச்சனை நாடு முழுவதும் உள்ளதாகவும், இன்னும் 20 நாட்களில் வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேசிய கல்விக் கொள்கை: மாநிலங்களுக்கான அதிகாரங்களை குறைக்கும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தேசிய கல்விக் கொள்கை, மாநிலங்களுக்கான அதிகாரங்களின் மதிப்பைக் குறைத்து, நாட்டில் சமூகநீதி, சமத்துவத்திற்கு கூடுதல் தடைகளை உருவாக்குகிறது என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
2. முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது-ஆர்.எஸ். பாரதி
முருகரை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் தெரிவித்த கருத்தை திமுக வன்மையாக கண்டிக்கிறது என திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி கூறி உள்ளார்.
3. திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனா பாதிப்பு
திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் விபி கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. "ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் வசூல் வேட்டை நடத்திய திமுக கே.பி.ராமலிங்கம் குற்றச்சாட்டு
"ஒன்றிணைவோம் வா" திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கே.பி.ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.
5. ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -அரசியல் தலைவர்கள் இரங்கல்
ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.