மாநில செய்திகள்

மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு + "||" + Thirumavalavan files case demanding ban on indirect elections

மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு

மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு
மேயர் மற்றும் நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த தடை விதிக்க கோரி திருமாவளவன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரான திருமாவளவன் எம்.பி. சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்;-

மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை. 

மறைமுக தேர்தல் குறித்து அவசர சட்டம் பிறப்பித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே இந்த மறைமுக தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
தமிழகத்துக்கான ரூ.12,250 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட கோரிய வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
2. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு: குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவு
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில், குற்றப்பத்திரிகையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
3. திருச்சியில் வீட்டோடு மாப்பிள்ளையாக மறுத்த வாலிபரின் மண்டை உடைப்பு மாமனார், மாமியார் மீது வழக்கு
வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க மறுத்ததால், புதுமாப்பிள்ளையின் மண்டை உடைக்கப்பட்டது. இது தொடர்பாக மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
4. கொரோனா விதியை மீறியதாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்கு
கொரோனா விதியை மீறி கூட்டத்தை கூட்டியதாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. தந்தை-மகன் கொலை வழக்கு: சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை
தந்தை-மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர்கள் முக்கிய தடயங்களை ஆய்வு செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...