தேசிய செய்திகள்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது + "||" + Citizenship Amendment Bill, 2019 passed in Lok Sabha with 311 'ayes' & 80 'noes'.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது
மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.
புதுடெல்லி,

பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத  பாகுபாட்டால் வெளியேறி இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என்று பா.ஜனதா தனது நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, 1955-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, 2016-ம் ஆண்டு குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டு வந்தது.


இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால்,  மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படவில்லை. மக்களவை பதவிக்காலம் முடிவடைந்தவுடன், அந்த மசோதா காலாவதி ஆகிவிட்டது. ஆகவே, புதிதாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் என்று மோடி அரசு அறிவித்தது. இதற்கு மத்திய மந்திரிசபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, மக்களவையில் நேற்று மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கேள்வி நேரத்துக்கும், மதிய உணவுக்கும் இடைப்பட்ட நேரத்தில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மசோதாவை தாக்கல் செய்து பேசினார். நேற்று பிற்பகலில் மசோதா மீதான விவாதம் தொடங்கியது.

அதில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக குடியுரிமை சட்ட திருத்த மசோதா இயற்றப்படவில்லை என்று அமித் ஷா தெரிவித்தார்.

இந்நிலையில், ஒன்பது மணிநேரதிற்கும் மேல் நீடித்த விவாதத்திற்கு பிறகு இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவின் பிரிவுகளில் எதிர்கட்சிகள்  முன்வைத்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.

பின்னர் மசோதாவுக்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து புதுமடத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
2. டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் மீண்டும் ரெயில் சேவை தொடங்கியது
டெல்லியில் அனைத்து மெட்ரோ நிலையங்களிலும் மீண்டும் ரெயில் சேவைகள் தொடங்கியது.
3. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது ஏன்? -மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவில் முஸ்லிம்கள் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து உள்ளார்.
4. குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. அரசியல் நோக்கங்களுக்காக முஸ்லிம்களைத் தூண்டும் காங்கிரஸ் மற்றும் அதன் நட்பு கட்சிகள் -பிரதமர் மோடி
அரசியல் நோக்கங்களுக்காக முஸ்லிம்களை காங்கிரசும் அதன் நட்பு கட்சிகளும் தூண்டி விடுகின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.