மாநில செய்திகள்

திருச்சி, திண்டுக்கல்லுக்கு வந்த 230 டன் வெளிநாட்டு வெங்காயம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை + "||" + 230 tonnes of foreign onions arrived at Dindigul, Trichy

திருச்சி, திண்டுக்கல்லுக்கு வந்த 230 டன் வெளிநாட்டு வெங்காயம் ஒரு கிலோ ரூ.100க்கு விற்பனை

திருச்சி,  திண்டுக்கல்லுக்கு  வந்த  230  டன்  வெளிநாட்டு  வெங்காயம்   ஒரு கிலோ  ரூ.100க்கு  விற்பனை
திருச்சி, திண்டுக்கல்லுக்கு வெளிநாடுகளில் இருந்து 230 டன் வெங்காயம் வந்து உள்ளது.ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை ஆனது.
திருச்சி,

தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெங்காயம் அகில இந்திய அளவில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசப்படும் ஒரு பொருளாகி விட்டது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. திருச்சியில் முதல் தரமான பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. உருவத்தில் சிறிய, ஈரமான வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 முதல் கிடைத்து வந்தது.

இந்நிலையில் எகிப்து நாட்டில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் நேற்று திருச்சி வெங்காய மண்டிக்கு வந்தது. எகிப்தில் இருந்து கப்பல் மூலம் மும்பை துறைமுகத்தில் இறங்கிய இந்த வெங்காயத்தை 3 லாரிகளில் நேற்று திருச்சிக்கு கொண்டு வந்து இறக்கினார்கள். இந்த வெங்காயம் சற்று கருமையான நிறத்தில் காணப்பட்டது.

தட்டுப்பாடு நீங்கியது

இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தொடர்பாக மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில் ‘எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதால் பெரிய வெங்காயம் தட்டுப்பாடு நீங்கி விட்டது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள் வாங்கி சென்று உள்ளனர். ஒரு கிலோ வெங்காயம் ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்து வருகிறோம்’ என்றார். இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 50 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டன.

திண்டுக்கல்லுக்கு...

இதே போல் எகிப்து, நைஜீரியா ஆகிய நாடுகளில் இருந்து கப்பல் மூலம் தூத்துக்குடிக்கு 200 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் திண்டுக்கல் வெங்காய தரகுமண்டிக்கு மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்டது.

மேலும் இந்த வெங்காயம் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.110-க்கு விற்கப்பட்டது. இதன் காரணமாக திண்டுக்கல்லில் ஓட்டல் நடத்துபவர்கள், காய்கறி வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தை வாங்கிச்சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்-மறியல் போராட்டம் - 1,250 பேர் கைது
திருச்சியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்றது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 1,250 பேர் கைது செய்யப்பட்டனர். வேலை நிறுத்த போராட்டத்தினால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
2. திருச்சியில் அழுகிய வெங்காய பயிர்களுடன் விவசாயிகள் போராட்டம்
திருச்சியில் அழுகிய வெங்காய பயிர்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் அரை நிர்வாண கோலத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினார்கள்.
3. திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை
திருச்சி, திருவெறும்பூரில் பெல் ஆலை வளாகத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.1.5 கோடி கொள்ளை நடைபெற்றுள்ளது.
4. குறை சொல்லும் நேரமில்லை; குழந்தை மீட்பே குறிக்கோள்- கவிஞர் வைரமுத்து டுவிட்
அரசு எந்திரத்தையோ, ஆழ்துளை எந்திரத்தையோ குறை சொல்லும் நேரமில்லை, குழந்தை மீட்பே குறிக்கோள் என்று கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
5. திருச்சியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் விமானம் ரத்து: உயிர் தப்பிய 120 பயணிகள்
திருச்சியில் இருந்து மலேசியா செல்லவிருந்த விமானத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடைசி நேரத்தில் விமானம் ரத்து செய்யப்பட்டது.

அதிகம் வாசிக்கப்பட்டவை