தேசிய செய்திகள்

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு + "||" + Election case against Kanimozhi: Supreme Court refuses to ban High court hearing

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு: ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு தொடர்பான, ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்தது.
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கனிமொழி பெற்ற வெற்றி செல்லாது என்று அறிவிக் கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தானகுமார் என்ற வாக்காளர் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி எம்.பி. தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பையும், தனக்கு எதிரான தேர்தல் வழக்கையும் ரத்து செய்யக்கோரி கனிமொழி எம்.பி. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, நீதிபதிகள் பி.ஆர். கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் நடைபெற்றது. கனிமொழி தரப்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் சிங்வி, பி.வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் ஐகோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க மறுத்ததோடு, எதிர்மனுதாரர் சந்தானகுமார் பதில் மனு தாக் கல் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஓரிரு நாளில் அறிவிப்பு
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி நிதான ஆட்டம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், தென்ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடி வருகிறது.
3. மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி தடுமாற்றம்
சென்னையில் நடந்து வரும் மும்பைக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்து தடுமாறியது.
4. தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: மும்பை அணி 488 ரன்கள் குவிப்பு
சென்னையில் நடந்து வரும் தமிழகத்துக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணி 488 ரன்கள் குவித்தது.
5. இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 3-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி; தொடரையும் கைப்பற்றியது
இலங்கைக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.