மாநில செய்திகள்

மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின் பேட்டி + "||" + DMK is ready to meet the people MKStalin

மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின் பேட்டி

மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது - மு.க.ஸ்டாலின் பேட்டி
மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது.தேர்தலை கண்டு நாங்கள் ஓடி ஒளியவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை. நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை. மக்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது.

தற்போதாவது உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை  முறையாக நடத்த வேண்டும்.  உள்ளாட்சி தேர்தல் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு முறையாக வராத நிலையில் பல தகவல்கள் பரப்பப்படுகின்றன.

உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சம்மட்டி அடி என்றால் அதிமுகவுக்கு அது மரண அடி. நள்ளிரவு வரை இருந்து குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திமுக எம்.பிக்கள் வாக்கு செலுத்தினர். குடியுரிமை மசோதாவை ஆதரித்து தமிழர்களுக்கு அதிமுக ஆட்சி துரோகம் செய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்து பேச வேண்டும் என மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. தி.மு.க.வின் வெற்றியை பறிக்க அ.தி.மு.க. முயற்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மு.க.ஸ்டாலின் பேட்டி
“உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை பறிக்க அ.தி.மு.க. முயற்சி செய்கிறது. தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த முடிவு எடுப்போம்” என மு.க.ஸ்டாலின் கூறினார்.
3. உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது மரண அடி மு.க.ஸ்டாலின் பேட்டி
உள்ளாட்சி தேர்தல் வழக்கில் அ.தி.மு.க.வுக்கு சுப்ரீம் கோர்ட்டு மரண அடி கொடுத்துள்ளது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
4. முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு விடுமுறை அளிப்பது குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பரிசீலனை நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் மு.க.ஸ்டாலின் பேட்டி
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு விடுமுறை அளிப்பது குறித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பரிசீலிக்கப்படும் என்று நினைவிடத்தில் மரியாதை செலுத்தியபின் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
5. பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகை பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் வருகை பயனுள்ள பயணமாக அமைய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.