தேசிய செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்: சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாள் - பிரதமர் மோடி + "||" + PM on CitizenshipAmendmentBill2019: A landmark day for India & our nation’s ethos of compassion & brotherhood

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்: சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாள் - பிரதமர் மோடி

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்: சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாள் - பிரதமர் மோடி
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று  (டிச.11) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 எம்.பி.,க்கள் வாக்களிக்க, மசோதாவுக்கு எதிராக 105 எம்.பி.,க்கள் மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தனர்.    இருஅவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.

இந்நிலையில், இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பல ஆண்டுகளாக துன்புறுத்தல்களை எதிர்கொண்ட பலரின் பாதிப்பை இந்த மசோதா தணிக்கும். மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி. நமது தேசத்தின் கருணை மற்றும் சகோதரத்துவத்திற்கான முக்கியமான நாள் ஆகும் என பதிவிட்டுள்ளார்.