தேசிய செய்திகள்

மக்களவையில் ஆதரவு அளித்து விட்டு மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு + "||" + Leave support in Lok Sabha Citizenship Amendment Bill in the Rajya Sabha to protest Shiv Sena

மக்களவையில் ஆதரவு அளித்து விட்டு மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு

மக்களவையில் ஆதரவு அளித்து விட்டு மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு
மக்களவையில் ஆதரவு அளித்து விட்டு மாநிலங்களவையில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய சிவசேனா கட்சி, குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக மக்களவையில் ஓட்டு போட்டது. ஆனால் மாநிலங்களவையில் மசோதாவுக்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.


மசோதா மீது அந்தக் கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவுத் பேசும்போது, “இந்த மசோதாவை நாம் மதத்தின் அடிப்படையில் விவாதிக்காமல் மனிதாபிமானத்தின் அடிப்படையில் விவாதிக்க வேண்டும். ஊடுருவியவர்களுக்கும், அகதிகளுக்கும் இடையே வித்தியாசம் உண்டு” என்று கூறினார்.

தீவிரமான இந்து கட்சி, தேசபக்தி கொண்ட கட்சி என்பதை சிவசேனா கட்சி நிரூபிக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும், “ஊடுருவியவர்களை நாட்டை விட்டு தூக்கி எறிவோம் என்பது அமித் ஷா அளித்த உறுதி, அதுதான் அவர் அளித்த தேர்தல் வாக்குறுதி. இந்த மசோதாவின்படி குடியுரிமை வழங்குகிறபோது ஓட்டு வங்கி அரசியல் கூடாது” எனவும் சஞ்சய் ராவுத் வலியுறுத்தினார்.


தொடர்புடைய செய்திகள்

1. காதலர் தின உற்சாக கொண்டாட்டம் ஆதரவு, எதிர்ப்பு போராட்டங்களால் பரபரப்பு
புதுச்சேரியில் காதலர் தினம் கொண்டாடப்பட்டது. இதை ஆதரித்தும் எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசிய வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.
3. எதிர்க்கட்சிகள் கடும் அமளி ; மக்களவை நண்பகல் 1 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகள் கடும் அமளி காரணமாக மக்களவை நண்பகல் 1 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4. அரசியல் கட்சிகளிடம் ஆதரவு திரட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள் முடிவு - ஊழியர் சங்க நிர்வாகி பேட்டி
எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யும் முடிவை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் நேற்று ஒரு மணி நேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அடுத்தக்கட்டமாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டப்போவதாக ஊழியர் சங்க நிர்வாகி தெரிவித்தார்.
5. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு
எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.