தேசிய செய்திகள்

அசாம் முதல்வர் இல்லம் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு + "||" + Stones Pelted at Assam CM's House in Dibrugarh as District Placed under Curfew Amidst CAB Protests

அசாம் முதல்வர் இல்லம் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு

அசாம் முதல்வர் இல்லம் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
திப்ருகர்

அசாம் மாநிலத்தில் குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால்,  திப்ருகர் உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.  

எந்த அமைப்போ, அரசியல் கட்சியோ போராட்டம் அல்லது முழு அடைப்போ அறிவிக்கவில்லை என்றாலும், ஆங்காங்கே தன்னிச்சையான போராட்டங்கள் வெடித்தன. நெடுஞ்சாலைகளில் மரக்கட்டைகளையும், பழைய டயர்களையும் போட்டு எரித்தனர். பல நகரங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. 

அசாம் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க ராணுவத்தினரும் உதவ வேண்டும் என்று மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ராணுவ கமாண்டர்களும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் ஒரு அணியை சேர்ந்த ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, நேற்று இரவு  நடைபெற்ற போராட்டத்தின் போது, லக்கிநகர் பகுதியில்  உள்ள  அசாம் முதல்வர் இல்லத்தின் மீது போராட்டக்காரர்கள் கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்வீச்சில், சில ஜன்னல் கண்ணாடிகள் உடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  அதேபோல், பாஜக எம்.எல்.ஏ பிரசந்தா புகான் மற்றும் கட்சியின் தலைவர் சுபாஷ் தத்தா ஆகியோரின் இல்லத்தையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். 

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதால், அங்கு பதற்ற சூழலே காணப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

1. அசாம் பயணத்தை தவிர்த்தார் பிரதமர் மோடி
'கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுகள்' அசாமின் கவுகாத்தி நகரில் 10-ம்தேதி தொடங்கவுள்ளன. இதனை தொடங்கி வைக்குமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
2. அசாமில் வன்முறை ; ரூ.1000 கோடி இழப்பு என அரசு தகவல்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டதால், ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என கணித்திருப்பதாக அசாம் அரசு தெரிவித்துள்ளது.
3. அசாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது : முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால்
அசாம் மக்களின் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது என்று அம்மாநில முதல் மந்திரி சர்பானந்தா சோனோவால் தெரிவித்துள்ளார்.
4. இந்திய சுற்றுப்பயணத்தை ஜப்பான் பிரதமர் ரத்து செய்யலாம் எனத் தகவல்
அசாமில் போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்திய சுற்றுப்பயணத்தை ஜப்பான் பிரதமர் ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
5. அசாம், திரிபுராவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து
அசாம், திரிபுராவில் நடைபெற இருந்த ராஞ்சி கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.