தேசிய செய்திகள்

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் ; பிரதமர் மோடி + "||" + "No One Can Take Away Your Rights," PM Assures Assam On Citizenship Bill

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் ; பிரதமர் மோடி

குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் ; பிரதமர் மோடி
குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டம் வலுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். நேற்று மாலை போராட்டத்தின் போது வன்முறையும் வெடித்தது. இதையடுத்து, கவுகாத்தி உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

வன்முறை ஏற்படாமல் தடுக்க அசாம் விரைந்த ராணுவம், இன்று காலை கொடி அணிவகுப்பு நடத்தியது. தின்சுகியா, திப்ருகர், ஜோர்ஹத் ஆகிய மாவட்டங்களில் ராணுவம் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. அசாமில் தொடர்ந்து பதற்ற சூழல் நிலவி வரும் நிலையில், குடியுரிமை மசோதா குறித்து யாரும் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை  என்று பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

டுவிட்டரில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,  குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து  யாரும் கவலைப்பட தேவையில்லை என்று அசாம் சகோதர சகோதரிகளுக்கு நான் உறுதியளிக்கிறேன். உங்கள் உரிமைகளை யாராலும் பறிக்க முடியாது. உங்களின் உரிமைகள், தனித்துவ அடையாளம், அழகான கலாச்சாரம்  ஆகியவை தொடர்ந்து செழித்து வளரும்.  அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ன் படி மாநில மக்களின் மொழி, கலாச்சாரம், உரிமைகள் பாதுகாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. வரலாற்று அநீதியை சரிசெய்யவே குடியுரிமை திருத்த சட்டம் -என்.சி.சி பேரணியில் பிரதமர் மோடி பேச்சு
வரலாற்று அநீதியை சரிசெய்யவே மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தைக் கொண்டு வந்தது என என்.சி.சி பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
2. உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது -பிரதமர் மோடி
உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.
3. நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடம் -பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்
நாக்பூரில் புதிய மெட்ரோ வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 28-ம் தேதி திறந்து வைக்கிறார்.
4. அசாமில் குடியரசு தினவிழாவுக்கு சென்ற மந்திரிக்கு கருப்புக்கொடி காட்டிய மாணவர்கள்
அசாமில் குடியரசு தினவிழாவுக்கு சென்ற மந்திரிக்கு மாணவர்கள் கருப்புக்கொடி காட்டினர்.
5. பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேமிப்புக்கு பயன்படுத்தும் யோசனை - தமிழகத்திற்கு பிரதமர் மோடி பாராட்டு
பயனற்ற ஆழ்துளை கிணற்றை மழைநீர்சேகரிப்பு அமைப்பாக மாற்றும் புதியயோசனை தமிழகத்தில் உதித்துள்ளது என்று பிரதமர் மோடி மான் கி பாத் உரையில் குறிப்பிட்டுள்ளார்.