கிரிக்கெட்

அசாம், திரிபுராவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து + "||" + Day four of Ranji Trophy games in Assam and Tripura suspended due to curfew

அசாம், திரிபுராவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள் ரத்து

அசாம், திரிபுராவில் நடைபெற இருந்த கிரிக்கெட் போட்டிகள்  ரத்து
அசாம், திரிபுராவில் நடைபெற இருந்த ராஞ்சி கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கவுகாத்தி,

குடியுரிமைத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும்.  குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக வந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடியின மக்கள் எண்ணுவதாக தெரிகிறது. 

இத்தகைய காரணங்களால், அசாம், திரிபுராவில் கடுமையான போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தை ஒடுக்க ராணுவம் சென்றுள்ளது.  இதற்கிடையே, அசாம் மற்றும் திரிபுராவில் நடைபெற இருந்த ராஞ்சி கிரிக்கெட் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 

வேறு மாநில மைதானங்களில் போட்டி நடத்தப்படுமா? அல்லது புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்படுமா? என்பது பற்றி விளக்கம் அளிக்கவில்லை. எனினும், ஆலோசனைக்கு பிறகு அறிவிக்கப்படும் என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அசாமில் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு
அசாமில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்ந்துள்ளது.
2. அசாம் வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்வு
அசாம் வெள்ளத்தில் இன்று மேலும் 5 பேர் பலியானதையடுத்து, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
3. அசாமில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 20 பேர் பலி; மீட்புப்பணிகள் தீவிரம்
அசாமில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
4. கொரோனா எதிரொலி: அசாம், குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை
கொரோனா அச்சம் காரணமாக அசாம், குஜராத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
5. அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு - பிரக்யான் ஓஜா அறிவிப்பு
அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக பிரக்யான் ஓஜா அறிவித்துள்ளார்.