உலக செய்திகள்

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் 'டைம்' பத்திரிகை தேர்வு + "||" + Teen climate activist Greta Thunberg is Time's Person of the Year

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க் 'டைம்' பத்திரிகை தேர்வு

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் கிரேட்டா தன்பர்க்  'டைம்' பத்திரிகை தேர்வு
டைம் இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்றார் சுற்று சுழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க்
லண்டன்

சுவீடனைச் சேர்ந்த 16 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார். இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அப்போது தான் உலகளவில் #FridaysForFuture என்ற ஹேஷ்டேக் மிகவும் பிரபலமானது.

கடந்த செப்டம்பர் மாதம், நியூயார்க்கில் நடந்த ஐ.நா வின் பருவநிலை மாற்றத்திற்கான மாநாட்டில், தேசிய அளவிலான அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டி பேசினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பான போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடிய ஸ்வீடன் நாட்டு பள்ளி மாணவியான கிரேட்டா தன்பெர்க் 2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக 'டைம்' பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

''இந்த ஆண்டு கிரகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையின் வலிமையான குரலாக கிரேட்டா மாறினார், உலகளாவிய அளவில் பருவநிலை மாற்றத்திற்கான இயக்கத்தை அவர் வழி நடத்துகிறார். '' என்று டைம் பத்திரிக்கையின் இந்த பரிந்துரையை அறிவித்த அதன் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஃபெல்செந்தல் தெரிவித்தார்.

1927ம் ஆண்டில் இருந்து டைம் பத்திரிக்கையின் வரலாற்றில் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் 16 வயதுடைய கிரேட்டா தன்பெர்க் தான் மிகவும் இளையவர்.

டைம் பத்திரிகையின் இந்த கவுரவத்தை, #FridaysForFuture இயக்கத்தினருடனும் பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் செயல்பாட்டாளர்களுடனும் பகிர்ந்துகொள்வதாக கிரேட்டா தன்பெர்க் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிடம் பருவநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் பூர்வமான கேள்விகளை எழுப்பியுள்ளார் கிரேட்டா.

ஆசிரியரின் தேர்வுகள்...