தேசிய செய்திகள்

"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது" மோடி மீது காங்கிரஸ் தாக்கு + "||" + But people in Assam can't read your message without Internet: Congress on Modi's assurance on Citizenship Bill

"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது" மோடி மீது காங்கிரஸ் தாக்கு

"அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது" மோடி மீது காங்கிரஸ் தாக்கு
அசாம் மக்கள் இணைய சேவை இல்லாமல் உங்கள் செய்தியை படிக்க முடியாது என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தாக்கி உள்ளது.
புதுடெல்லி

நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குடியுரிமை திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து அசாம், திரிபுரா, மற்றம் மேகலயா போன்ற மாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது. அசாம்- திரிபுராவில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. 

இந்த நிலையில்  பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டரில் ”அசாமின்  எனது சகோதர சகோதரிகளுக்கு குடியுரிமை மசோதா குறித்து அவர்கள் கவலைப்பட ஒன்றுமில்லை என்று நான் உறுதியளிக்க விரும்புகிறேன். - உங்கள் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாச்சாரத்தை யாரும் பறிக்க முடியாது. அது தொடர்ந்து செழித்து வளரும்"

"அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6ன் படி மாநில மக்களின் மொழி, கலாசார, நில உரிமைகள் பாதுகாக்கப்படும்" என தனது ட்விட்டரில்  கூறி இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் அசாமில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் உங்கள் 'உறுதியளிக்கும்' செய்தியை படிக்க முடியாது, மோடிஜி . நீங்கள் மறந்து விட்டீர்கள்! அவர்களின் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என கூறி உள்ளது.