தேசிய செய்திகள்

”துணிச்சலான நடவடிக்கை” குடியுரிமை மசோதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு + "||" + ''Courageous Step,'' Says RSS As Citizenship Bill Passes Parliament

”துணிச்சலான நடவடிக்கை” குடியுரிமை மசோதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு

”துணிச்சலான நடவடிக்கை” குடியுரிமை மசோதாவுக்கு ஆர்.எஸ்.எஸ். பாராட்டு
குடியுரிமை மசோதா நிறைவேற்றப்பட்டது துணிச்சலான நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். பாராட்டு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

குடியுரிமைத் திருத்த மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014 டிசம்பர் 31 ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை திருத்த சட்டம் மசோதா  வழி வகை செய்கிறது. 

ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இது சட்டமாகும்.  குடியிருப்பு மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வங்கதேச மக்களின் ஊடுருவலுக்கு எதிராக நீண்ட காலம் போராட்டம் நடத்தி வரும் அசாம் மக்கள், இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 

குடியுரிமை திருத்த மசோதா துணிச்சலான நடவடிக்கை என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச்செயலாளர் பையாஜி ஜோஷி பாராட்டு தெரிவித்துள்ளார்.  இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

1. தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் - அமெரிக்கா
இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
2. குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டாம் ; பிரதமர் மோடி
குடியுரிமை மசோதா குறித்து அசாம் மக்கள் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
3. குடியுரிமை மசோதா; கருத்து கூற ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு
மக்களவையில் குடியுரிமை மசோதா நிறைவேறியது குறித்து கருத்து கூற ஐக்கிய நாடுகள் சபை மறுப்பு தெரிவித்து விட்டது.
4. குடியுரிமை மசோதா : காலையில் விமர்சனம், மாலையில் ஆதரவு- சிவசேனா அந்தர் பல்டி!!
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக சிவசேனா சாம்னாவில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து இருந்தது.
5. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.