மாநில செய்திகள்

ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட் + "||" + Based on Jayalalithaa's life There is no ban on film and web series chennai high court

ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்

ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட படத்துக்கும், இணையதள தொடருக்கும் தடை இல்லை- சென்னை ஐகோர்ட்
ஜெயலலிதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட தலைவி படத்துக்கும், குயின் இணையதள தொடருக்கும் தடை இல்லை என தீபா தாக்கல் செய்த வழக்கை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்தது.
சென்னை,

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றின் அடிப்படையில் கங்கனா ரனாவத் நடிக்கும் "தலைவி" என்ற படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய்யும், ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் "குயின்" என்ற இணையதள தொடரை கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.

இந்நிலையில் தன் அனுமதியில்லாமல் தலைவி, குயின் ஆகியவற்றை தயாரிக்கவோ, விளம்பரப்படுத்தவோ, திரையிடவோ கூடாது என்றும், தடை விதிக்க கோரியும் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகளான ஜெ. தீபா, உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவா என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. திரைப்படத்தையும், இணையதளத் தொடரையும் பார்க்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும், படத்தைப் பார்த்து ஆட்சேபகரமான காட்சிகளை நீக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

இயக்குநர் விஜய் தரப்பில், '' 'தலைவி' திரைப்படம், 'தலைவி' என்ற பெயரில் வெளியான புத்தகத்தைத் தழுவி எடுக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ள இந்தப் புத்தகத்துக்கு இதுவரை தடை ஏதும் கோரப்படவில்லை. தீபா ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசு என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை'' எனத் தெரிவிக்கப்பட்டது.

இணையதளத் தொடர் தயாரிக்கும் கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில், ''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்தத் தொடர் தயாரிக்கப்படவில்லை. 'குயின்' என்ற புத்தகத்தைத் தழுவியே எடுக்கப்படுகிறது. 2018-ம் ஆண்டிலேயே இணையதளத் தொடர் தயாரிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு, 25 கோடி ரூபாய் செலவில் தொடரைத் தயாரித்துள்ள நிலையில், விளம்பரத்துக்காக கடைசி நேரத்தில் தீபா வழக்குத் தொடர்ந்துள்ளார்'' எனத் தெரிவிக்கப்பட்டது.

தனது வாழ்நாள் முழுவதும் ஜெயலலிதாவுடன் இருந்ததாக மனுதாரர் கூறுவது பொய். 2002-ம் ஆண்டுக்குப் பின் ஜெயலலிதாவுடன் தொடர்பில் இல்லாத தீபா 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின் தான் வந்துள்ளார். அதனால் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய தீபாவுக்கு அடிப்படை உரிமை இல்லை என வாதிடப்பட்டது. வழக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி  தீர்ப்பளித்தார். ஏற்கனவே கவுதம் வாசுதேவ் மேனன் தனது தொடரில் தீபா குறித்து கதாபாத்திரம்  இல்லை   எனத் தெரிவிக்கப்பட்ட அடிப்படையில் தொடருக்குத் தடை விதிக்க முடியாது. 'தலைவி' படத்தில் முழுக்க முழுக்க இது கற்பனைப் பாத்திரம் மட்டுமே என்று குறிப்பிடுவதால் அதற்கும் தடை விதிக்க முடியாது என்று கூறி, நீதிபதி வழக்கை முடித்து வைத்து தீர்ப்பளித்தார். தலைவி படம் முழுக்க முழுக்க கற்பனையானது என அறிவிப்பு வெளியிடவும் பட நிறுவனத்திற்கு உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்? நீதிபதிகள் கேள்வி
தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?- ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
2. சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 10 நீதிபதிகள் நியமனம்
சென்னை ஐகோர்ட்டில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கொலீஜியம் ஒப்புதல் அளித்து உள்ளது.
3. கோவில்களில் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிட கூடாது? சென்னை உயர்நீதிமன்றம்
கோவில்களின் அறங்காவலர்களின் பெயர்களை ஏன் வெளியிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
4. அரசு உதவி பெறாத பள்ளிகள் 40 சதவீத கட்டணம் வசூலிக்க அனுமதி: சென்னை உயர் நீதிமன்றம்
வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் நடப்பு கல்வியாண்டுக்கான கல்வி கட்டணத்தில் 40 சதவிகித்தை வசூல் செய்து கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
5. ‘ஆன்லைன்’ வகுப்புகள் கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளது-ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு
ஊரடங்கினால் மாணவர்களின் கல்வி தடைப்படக்கூடாது. ‘ஆன்லைன்’ வகுப்புகள் வளர்ந்து வரும் கல்வி போதிக்கும் முறையாக மாறி உள்ளது என்று சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.