தேசிய செய்திகள்

என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் - பிரபல தொழில் அதிபர் பெருமை + "||" + My great-great-grandmother was an Indian from Tamil Nadu, says Virgin founder Richard Branson

என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் - பிரபல தொழில் அதிபர் பெருமை

என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் - பிரபல தொழில் அதிபர் பெருமை
என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என பிரபல தொழில் அதிபர் ரிச்சர்ட் பிரான்சன் கூறி உள்ளார்.
மும்பை

பிரபல தொழில் அதிபரும் விர்ஜின் குழுமத்தின் தலைவருமான ரிச்சர்ட்  பிரான்சன் மராட்டிய மாநிலம்  வந்துள்ளார். மராட்டிய  முதல்வர் உத்தவ் தாக்கரேயை இன்று அவர் சந்திக்கிறார். ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட தொழிலதிபர்களையும் சந்திக்கவுள்ளார்.

மும்பையில் நிருபர்களிடம்  பிரான்சன் கூறியதாவது:-

தனக்கும் இந்தியாவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னுடைய டி.என்.ஏ.வைப் பரிசோதித்தபோது இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. 

என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டில் உள்ள கடலூரில் 1793- ம் ஆண்டு முதல் நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது, என்னுடைய மூதாதையர் ஆர்யா என்ற தமிழகப் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்தியர்களை நான் சந்திக்கும்போதெல்லாம் ஒருவேளை நாம் இருவரும் உறவினர்களாக கூட இருப்போம் என்று விளையாட்டாக கூறுவது உண்டு'' என்றும் பிரான்சன் கூறினார்.

விர்ஜின் அட்லாண்டிக் விமான நிறுவனத்தின் புதிய சின்னமாக தமது எள்ளு பாட்டியை குறிக்கும் உருவம் இடம்பெறும் என்றும் ரிச்சர்டு பிரான்சன் கூறியுள்ளார்.

பிரான்ஸனின் மூதாதையர்களில் ஒருவரான ஜான் எட்வர்ட் 1793- ம் ஆண்டு முதன்முறையாக சென்னை வந்துள்ளார். இங்கிருந்து அவரின் குடும்பம் கடலூருக்கு நகர்ந்துள்ளது. இவரின் தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.