உலக செய்திகள்

வங்காளதேசத்தில் பிளாஸ்டிக் ஆலையில் தீவிபத்து: 13 பேர் பலி + "||" + 13 Killed, 21 Injured in Fire at Illegal Plastic Factory in Bangladesh

வங்காளதேசத்தில் பிளாஸ்டிக் ஆலையில் தீவிபத்து: 13 பேர் பலி

வங்காளதேசத்தில் பிளாஸ்டிக் ஆலையில் தீவிபத்து: 13 பேர் பலி
வங்காளதேசத்தில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 13 பேர் பலியாகினர்.
டாக்கா,

வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு அருகே உள்ள கெரானிகன்ச் நகரத்தில் உள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாக தீவிபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் 21 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உரிய அனுமதி இன்றி அந்த தொழிற்சாலை இயங்கி வந்ததாக அந்நாட்டின் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஆலையில் தீவிபத்து ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம்
வங்காளதேசத்தில் கொரோனா பாதித்த முன்னாள் மந்திரி மரணம் அடைந்தார்.
2. புதுடெல்லியில் தீ விபத்து: 1500 குடிசைகள் எரிந்து சாம்பல்
புதுடெல்லியில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 1500 குடிசைகள் எரிந்து சாமபலானது.
3. வங்காளதேசத்தில் ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 1,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4. வங்காளதேசத்தில் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலி
வங்காளதேசத்தில் முறையான பராமரிப்பு இல்லாததால் கழிவுநீர் தொட்டி வெடித்து கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியாகினர்.
5. மலேசியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து - 5 பேர் பலி
மலேசியாவின் ஜோகர் மாகாணத்தில் உள்ள எண்ணெய் ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டு தீவிபத்து நேரிட்டத்தில் 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.