தேசிய செய்திகள்

சீராய்வு மனு தாக்கல்: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது + "||" + Supreme Court three-Judge bench to hear on December 17 review petition of Akshay Kumar Singh, one of the convicts in 2012 gang rape case.

சீராய்வு மனு தாக்கல்: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது

சீராய்வு மனு தாக்கல்: நிர்பயா வழக்கின் குற்றவாளிகள் தூக்கு தண்டனை மீண்டும் தள்ளிப்போகிறது
நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்க்ஷய் குமார் சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது டிசம்பர் 17 ஆம் தேதி விசாரணை நடக்கிறது.
புதுடெல்லி,

டெல்லியில் நடந்த நிர்பயா பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேருக்கு இன்னும் சில நாட்களில் தூக்கு போட இருக்கும் நிலையில், அக் ஷய் சிங்கின் சீராய்வு மனு மீதான விசாரணை டிச.,17ல் நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார்  கைது செய்தனர்.

விசாரணையில் ஆறு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் அறிவித்தது. ஆறு பேரில் ஒருவர் சிறார் என்பதால் அவர் சிறார் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார். மீதமுள்ள 5 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங், டெல்லி திகார் சிறைக்குள்  தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் மற்ற 4 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். சுப்ரீம் கோர்ட்டு 4 பேரின்  தூக்கு தண்டைனையை உறுதிசெய்தது. 

குற்றவாளிகளின் கருணை மனுவும் நிராகரிக்க்ப்பட்டது.

இதனால் தூக்குப் போட போவதாக வாரண்ட்டும் வழங்கப்பட்டு விட்டது. சட்டப்படி கருணைமனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும். இதனால் 4 பேரும் டிச.,16 ம் தேதி தூக்கிலிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. அவர்களின் தூக்கு தண்டனை நிறைவேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. தூக்கு தண்டனையை நிறைவேற்ற 2  பேரை அனுப்புகிறது உத்தரபிரதேசம்.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார்  சிங், சுப்ரீம் கோர்ட்டில் , தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது டிச.,17ல் மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கும் என சுப்ரீம் கோர்ட்  அறிவித்துள்ளது. இதனால், தூக்கு தண்டனை மேலும் தள்ளிப்போகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளி பவன் குப்தாவின் சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
2. வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையத்தில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
வேட்பாளர்களின் குற்ற பின்னணி விவரங்களை இணையதளத்தில் வெளியிட அரசியல் கட்சிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.