தேசிய செய்திகள்

நித்யானந்தா விவகாரம்: கர்நாடக போலீசாருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இறுதிக் கெடு + "||" + Nithyananda issue Final deadline for the police High Court order

நித்யானந்தா விவகாரம்: கர்நாடக போலீசாருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இறுதிக் கெடு

நித்யானந்தா விவகாரம்: கர்நாடக போலீசாருக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் இறுதிக் கெடு
நித்யானந்தா விவகாரத்தில் கர்நாடக போலீசாருக்கு இறுதிக் கெடு விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு,

நித்தியானந்தா மீது ஆள்கடத்தல், பண மோசடி, பாலியல் புகார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.  அதேசமயம் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. 

மேலும் ஆசிரமத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நித்யானந்தாவை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். ஆனால் காவல்துறையினருக்கு தண்ணி காட்டி வரும் நித்யானந்தா அவ்வப்போது யூடியூபில் தலைக்காட்டி பிரசங்கம் செய்து வருகிறார்.

இந்தநிலையில், தலைமறைவாக உள்ள நித்யானந்தா எங்கு உள்ளார் என்பது குறித்து, இன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கர்நாடக உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இன்று அறிக்கை தாக்கல் செய்யாததால் வரும் டிசம்பர் 18-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய கர்நாடக அரசு மற்றும் மாநில போலீசாருக்கு நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், நித்யானந்தா மீதான வழக்குகளை ராம்நகர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக்கோரி அவரது முன்னாள் சீடர் லெனின் என்பவர் தொடர்ந்த வழக்கில் ராம்நகர் நீதிமன்றம் விசாரிக்க உயர் நீதிமன்றம்  தடை விதித்துள்ளது.