தேசிய செய்திகள்

சித்தராமையா மருத்துவமனையில் சிகிச்சை: கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் + "||" + former CM Siddaramaiah was admitted there last night CM BS Yediyurappa and state ministers KS Eshwarappa & Basavaraja Bommai visited a hospital

சித்தராமையா மருத்துவமனையில் சிகிச்சை: கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

சித்தராமையா மருத்துவமனையில் சிகிச்சை: கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா நேரில் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.
பெங்களூரு, 

முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சித்தராமையா கர்நாடகத்தில் நடந்த 15 தொகுதி இடைத்தேர்தலுக்காக கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

நேற்று காலை 6.30 மணியளவில் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு பசவேஸ்வரா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிக ரத்த அழுத்தம் மற்றும் உடல் பரிசோதனை நடைபெற்றது. முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்ட சித்தராமையாவுக்கு அடுத்தடுத்து இதயத்தில் வலி ஏற்பட்டது. இதையடுத்து மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருவதாக அவரது மகன் கூறினார்.

இந்நிலையில் நெஞ்சுவலி காரணமாக  பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவை கர்நாடக முதல்-மந்திரி பி.எஸ். எடியூரப்பா  மற்றும் அம்மாநில மந்திரிகள் கே.எஸ். ஈஸ்வரப்பா மற்றும் பசவராஜ் பொம்மை ஆகியோர் மருத்துவமனைக்கு  நேரில் சந்தித்து  உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்; சித்தராமையா குற்றச்சாட்டு
நாட்டில் ஜனநாயகம் இல்லை என்றும், பிரதமர் மோடி சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும் சித்தராமையா குற்றம்சாட்டி உள்ளார்.
2. பொய் செய்திகளை உருவாக்கும் தொழிற்சாலை, பா.ஜனதா; சித்தராமையா கடும் விமர்சனம்
மத்திய அரசு கர்நாடகத்திற்கு ரூ.1,869 கோடி நிதி ஒதுக்கியதாக பா.ஜனதா கூறி வருகிறது. இதை மறுத்துள்ள முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பா.ஜனதா பொய் செய்திகளை உருவாக்கும் தொழிற்சாலை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
3. பா.ஜனதாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை; சித்தராமையா கருத்து
துப்பாக்கி குண்டுகள் மூலம் அப்பாவிகளை கொன்ற பா.ஜனதாவிடம் இருந்து பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
4. கர்நாடகத்தை மற்றொரு காஷ்மீராக உருவாக்க எடியூரப்பா நினைக்கிறார்; சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
பா.ஜனதா ஆட்சியில் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும், கர்நாடகத்தை மற்றொரு காஷ்மீராக உருவாக்க எடியூரப்பா நினைக்கிறார் என்றும் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
5. மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ; சித்தராமையா வலியுறுத்தல்
மங்களூரு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வலியுறுத்தினார்.