சினிமா செய்திகள்

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி -ரஜினிகாந்த் டுவிட் + "||" + Thank you all for congratulating me Rajinikanth

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி -ரஜினிகாந்த் டுவிட்

என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி -ரஜினிகாந்த் டுவிட்
எனது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி என்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார். பிறந்த நாளான இன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தும், நலத்திட்ட உதவிகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர். அதேபோல் சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகளும், சினிமா பிரபலங்களும்  தங்களது வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்தனர்.

இந்தநிலையில்,  தனது பிறந்த நாளைகொண்டாடிய ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது:-

எனது பிறந்தநாளை விமரிசையாகக்கொண்டாடி என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப்பெருமக்களுக்கும், என்னை நெஞ்சாரா வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் மற்றும் பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும்,  பத்திரிக்கை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.