தேசிய செய்திகள்

அதிகமான விபத்துகளுக்கு மோசமான சாலைகளும் ஒரு காரணம் மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல் + "||" + Gadkari says road engineering one of key factors for accidents

அதிகமான விபத்துகளுக்கு மோசமான சாலைகளும் ஒரு காரணம் மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல்

அதிகமான விபத்துகளுக்கு மோசமான சாலைகளும் ஒரு காரணம் மத்திய மந்திரி நிதின்கட்காரி தகவல்
அதிகமான விபத்துகளுக்கு மோசமான சாலைகளும் ஒரு காரணம் என மத்திய மந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி, 

மக்களவையில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்காரி பேசும்போது கூறியதாவது:–

நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து விபத்துகள் நடைபெறும் ‘கருப்பு இடங்கள்’ என்று அழைக்கப்படும் இடங்களில் உள்ள பிரச்சினைகளை அறிந்து அவற்றை நீக்க அமைச்சகம் ரூ.14 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. நாட்டில் ஒவ்வொரு வருடமும் அதிகமான விபத்துகள் நடைபெறுவதற்கு ஓட்டுனர்கள் மற்றும் வாகனங்கள் மட்டுமே பொறுப்பு அல்ல. மோசமான சாலை அமைப்பும் பல விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.

எல்லை பகுதிகளை இணைக்கும் சாலைகள், கடற்கரை சாலைகள், சிறு துறைமுகங்களை இணைக்கும் சாலைகள், தேசிய சாலைகள், பொருளாதார சாலைகள் உள்பட பல்வேறு சாலைகளை மேம்படுத்த விரிவான ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.