மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் குரூப்–1 நேர்முக தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு + "||" + Group-1 interviews will take place as planned TNPSC

உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் குரூப்–1 நேர்முக தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் குரூப்–1 நேர்முக தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் குரூப்–1 நேர்முக தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
சென்னை,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெறவிருப்பதை முன்னிட்டு வருகிற 22–ந் தேதி முதல் 30–ந் தேதி வரை நடைபெறவிருந்த துறைத் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டு, அடுத்த (ஜனவரி) மாதம் 5–ந் தேதி முதல் 12–ந் தேதி வரை நடைபெறும்.

மற்றபடி, குரூப் 1–ல் அடங்கிய பதவிகளுக்கான நேர்முக தேர்வு திட்டமிட்டபடி வருகிற 23–ந் தேதி முதல் 31–ந் தேதி வரை (25 மற்றும் 29–ந் தேதி நீங்கலாக) தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும். மேலும் திட்ட அலுவலர், உளவியலாளர் மற்றும் சிறை அலுவலர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகளும் திட்டமிட்டபடி வரும் 21 மற்றும் 22–ந் தேதிகளில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.