மாநில செய்திகள்

ஆப்கானிஸ்தான் ராணுவ பெண் அதிகாரிகளுக்கு ஆயுதப்பயிற்சி சென்னையில் நடக்கிறது + "||" + Afghan female army officers Military training

ஆப்கானிஸ்தான் ராணுவ பெண் அதிகாரிகளுக்கு ஆயுதப்பயிற்சி சென்னையில் நடக்கிறது

ஆப்கானிஸ்தான் ராணுவ பெண் அதிகாரிகளுக்கு ஆயுதப்பயிற்சி சென்னையில் நடக்கிறது
ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்தை சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் ஆயுதம் கையாள்வது உள்ளிட்ட நவீன பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை, 

சென்னை, பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் சிறந்த மையம் என்ற பெயரை பெற்று உள்ளது. அத்துடன் வெளிநாட்டு ராணுவ அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இங்கு ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்தை சேர்ந்த 20 பெண் அதிகாரிகளுக்கு ஆயுதம் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு நவீன ராணுவப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சென்னையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக 3 ஆண்டுகளாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது 20 பெண் அதிகாரிகள் சென்னைக்கு வந்து, நான்கு வார ராணுவப் பயிற்சியை கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கினார்கள்.

இந்த பெண் அதிகாரிகள் 2 முதல் 9 ஆண்டுகள் வரை சேவையில் இருந்து வருகின்றனர். ஏற்கனவே இந்த அதிகாரிகள் அவர்களுடைய நாட்டில் பல்வேறு ராணுவப் பயிற்சிகளை பெற்று உள்ளனர்.

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் அவர்களுக்கு ஆயுதம் கையாள்வது உள்ளிட்ட நவீன பயிற்சி முறைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.