மாநில செய்திகள்

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: போலீஸ் அதிகாரி ராஜினாமா + "||" + IPS officer resigns in protest of CAB

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: போலீஸ் அதிகாரி ராஜினாமா

குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு: போலீஸ் அதிகாரி ராஜினாமா
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் அதிகாரி ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை, 

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. அதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.  இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையில் போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அப்துர் ரகுமான் என்ற ஐ.பி.எஸ். அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்வதாக டுவிட்டர் மூலம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்கவே தனது பதவியை ராஜினாமா செய்ததாக அவர் கூறினார்.